எனது ஊரில் நடைபெற்ற.. ஒரு சம்பவம்....ஒரு அழகான இளம் பெண் ஒருவள்..நான் எங்கு சென்றாலும் என் கூடவே அவளும் அங்கு வருவாள்..!நான் ரேஷன் கடைக்கு சென்றால்.. அவளும் அங்கு வருவாள்..!நான் குளத்திற்கு குளிக்க சென்றாலும் அவளும்.. அங்கு குளிப்பதற்கு வருவாள்..!நான் கோவிலுக்கு சென்றாலும்.. அவளும் அங்கு வருவாள்..! தினமும் என் கண்களில் தென்படுவாள்..!தினமும் அவள் என்னை பார்பாள்.. புன்னகை செய்வாள்..ஆனால்என்னிடம் பேசியது மட்டும் கிடையாது..!எனக்கு ஒரு சந்தேகம் வந்தது..!ஒரு வேளை நம்மை விரும்புகிறாளோ..? என்று..!ஒரு நாள் அவளிடம் கேட்டே.. விட்டேன்..! " என்னை நீ விரும்புகிறாயா.."? என்று..!அவள் அதற்கு ஒன்றும் பேசாமல் நின்றாள்..! பிறகு சொன்னாள்.." ஒரு மாதம் கழித்து சொல்கிறேன்.."!என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்..! எனக்கு ஒரு மாதம் என்பது.. ஒரு யுகம் போல் தெரிந்தது..! என் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள்.. சிறகடித்து பறந்தன..! சாப்பிட பிடிக்க வில்லை..!தூக்கம் வரவில்லை..! ஆனாலும் ஒரு பதற்றம்.. அவள் காதலை சொல்லாமல் வேறெதுவும்.. சொல்லி விடுவாளோ..? இல்லை..இல்லை.. அப்படி சொல்லி விட மாட்டாள்..!நம்பிக்கை இருந்தது..!ஒரு மாதமும் ஆனது.. நான் மிகுந்த எதிர் பார்புடன் இருந்தேன்..!ஒரு நாள் ஓர் இடத்தில் என்னை சந்தித்தாள்..! சிறிது நேரம் எதுவும் பேசவில்லை..! வெட்கம் அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது..!நான் கேட்டேன்.. " சொல்.. என்ன சொல்ல போகிறாய்.."? என்று..!.....மன்னிக்கவும் இந்த கதையை.. என்னால் இதற்கு மேல் தொடர முடியவில்லை..!காரணம்.. நான் இரண்டு ரூபாய்க்கு.. வாங்கி தின்ற பிட்டு.. சுண்டல் பேப்பரில் இவ்வளவு தான் இந்த கதை இருந்தது..!படுபாவி பய.. சுண்டல் காரன்.. இக்கதையை பாதியாக கிழித்து.. எனக்கு சுண்டல் மடித்து.. கொடுத்து விட்டான்..!மீதி கதையை யார் படித்தார்கள் என்று தெரியவில்லை..!நீதி;- அதிகமான விலைக்கு சுண்டல் வாங்கவும்.. முழு கதைகளை படிக்கவும்.
எனது ஊரில் நடைபெற்ற.. ஒரு சம்பவம்!!
Written By M.L on திங்கள், 15 செப்டம்பர், 2014 | செப்டம்பர் 15, 2014
Popular Posts
-
Nature of Thought Waves – Scientific View Thought waves can be imagined as either being similar to electromagnetic waves or sound waves...
-
ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு , பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே ? அப்...
-
Note : Provide your comments by clicking below options! Thanks ! :)
-
குட்டிக்கதை: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா ...
-
I am getting the cell value of a particular row in Telerik MVC Control, through OnRowSelect event using e.row.cells[1].innerText B...
-
Question This is might be simple doubt to you all but it is weird thing to me. I believe one of you surely can help me out on this. I need ...
-
Using SQL*Plus Autotrace • If you’re using SQL*Plus you can take advantage of the auto trace feature to have queries explained aut...
-
I am adding items in sharepoint using a C# console application. While adding an item ‘CREATE_DATE’ which should pick up System Date, I am un...
-
Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்...
-
Have you ever noticed how your brain is able to sync up both light and sound waves to present a cohesive picture for you ? Sound travels at...

0 comments:
கருத்துரையிடுக