Home » » நில நிர்வாக துறையினருக்கு நிலம் உங்கள் எதிர்காலம் நூலின் ஆசிரியரின் 23 அம்ச கோரிக்கைகள்

நில நிர்வாக துறையினருக்கு நிலம் உங்கள் எதிர்காலம் நூலின் ஆசிரியரின் 23 அம்ச கோரிக்கைகள்

Written By M.L on புதன், 15 ஏப்ரல், 2020 | ஏப்ரல் 15, 2020

நில நிர்வாக துறையினருக்கு நிலம் உங்கள் எதிர்காலம் நூலின் ஆசிரியரின் 23 அம்ச கோரிக்கைகள்:

10-ruppee-iyakkam-tamil-ngo


1.தமிழகத்தின் முதல்வர், தமிழகத்தின் வருவாய் துணை அமைச்சர், தமிழக நிலநிர்வாக ஆணையர், நில நிர்வாகத்தில் இருக்கின்ற அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் நிலம் சம்மந்தப்பட்ட, தொழிலில் இருக்கின்ற மக்கள் மற்றும் நிலம் சம்மந்தமாக எதுவுமே தெரியாமல் வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிற அல்லது நம் நாட்டிலேயே விவரம் தெரியாமல் இருக்கின்ற பொதுமக்கள் அனைவருக்கும் கடந்த 16 ஆண்டுகாலமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்த களப்பணி அனுபவத்தின் மூலமாக நான் தெரிந்துகொண்டுள்ள நிலம் சம்மந்தப்பட்ட தகவல்களை தங்களுக்கு “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் மூலம் ஓரளவு தெரியப்படுத்தியிருக்கேன். இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு நில சிக்கல்களுக்கு அடி நாதமாக இருப்பது அரசு இயந்திரத்தின் நில நிர்வாகம் ஆகும்.
2.அரசு இயந்திரத்தில் நில நிர்வாகம் எங்கெல்லாம் தேங்கியிருக்கின்றது. எவையெல்லாம் சீர்திருத்தப்பட வேண்டும். என்பதை 23 அம்ச கோரிக்கைகளாக நான் உங்கள் முன் வைக்கிறேன். இதனை முகநூல் மற்றும் இணையதள விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் மனு போராட்டமாகவும், இயக்கமாகவும் இதனையெல்லாம் சரிசெய்ய முடிவெடுத்துள்ளேன். அதற்கு ஆதரவு தந்து உதவுமாறு வேண்டுகிறேன்
கோரிக்கை (1):
நில நிர்வாகத்தை பொறுத்தவரை ஆதி நில நிர்வாக ஆவணம், செட்டில்மென்ட் லேண்ட் ரெகார்டு ஆகும். இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கின்ற UDR ஆவணத்திற்கு முந்தைய ஆவணம் ஆகும். UDR ஆவணத்தில் நில உரிமையை பொறுத்தவரை அரசு மற்றும் நில உரிமைதாரர் மட்டுமே ஆனால் பழைய SLR நில உடைமைதாரர் இடையில் ஜமீந்தாரர், இனாம்தாரர், மிட்டாமிராசு போன்ற middleman-கள் இருந்தனர்.
அந்த middleman-கள் ஒவ்வொரு சர்வே எண்ணிற்கும் எந்த தேதியில் வெளியேறினார்கள் என்ற தெளிவான விவரம் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
கோரிக்கை (2):
ஜமிந்தாரர், இனாம் தாரர், மிட்டா, மிராசு உரிமைகளை ஒழிக்கப்பட்டபோது மேற்படி நபர்கள் தங்களை குடிவார உரிமைக்கு (நில உரிமைதாரர்) மாற்றிக்கொண்டவர்களின் விவரங்களை தெளிவாக பட்டியல் இடவேண்டும்.
கோரிக்கை (3):
இனாம்தாரர்களின் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட விவரங்கள் அல்லது தனிநபர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் விவரங்கள் 1935-ஆம் ஆண்டு வெள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட இனாம் கமிஷன் ஆவணத்தை வெளிப்படையான ஆவணமாக பொது மக்களிடையே வெளிப்படுத்த வேண்டும்.
கோரிக்கை (4):
இனாம் கமிஷன் ரிப்போர்ட்டில் இனாம்தாரர்கள் தங்களுக்கு எப்படியெல்லாம் இனாம் வந்தது என்ற சான்று ஆவணங்களை இனாம் கமிஷன் ஒப்படைத்திருப்பர் அதன் விவரங்களையெல்லாம் வெளிப்படையாக தற்பொழுது பட்டியலிடவேண்டும்.
கோரிக்கை (5):
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லியாளம், பந்தல்குடி, கூடலூர் போன்ற பகுதிகளில் இருக்கின்ற பிரைவட் நிலமாக இருக்கின்ற ஜன்ம நில சர்ச்சையை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒன்று அந்த நிலங்களெல்லாம் ஜன்மிகளுக்கே சொந்தம் அல்லது அரசுகளுக்கே சொந்தம் என்று கறார் செய்துவிட வேண்டும். இன்னும் 50 ஆண்டுகளுக்கு அதனை இழுக்கக்கூடாது.
கோரிக்கை (6);
நில உச்சவரம்பு சட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் வந்த சொத்துக்களில் அரசு கையகபடுத்தியது பல இலட்சம் ஏக்கர் என்றால் கையகபடுத்தாமலேயே பெரும் நிலகிழார்களிடம் தங்கிவிட்டது பலலட்சம் ஏக்கர் என்று மேற்படி கையகப்படுத்தவிடாமல் இருந்த நிலங்களை அரசு கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது அவர்களிடமே கொடுத்திவிடவேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக இரண்டுகட்டான் நிலையிலேயே இருப்பது போல இனி இருக்கக்கூடாது. அந்த நிலங்கள் மனைபிரிவகளாகி பலர் அதில் பாதிக்கபட்டு கொண்டு இருக்கிறார்கள்.
கோரிக்கை (7):
நில உச்சவரம்பு சட்டத்தில் வரம்பிற்க்கு கொண்டுவந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்ததினால் நில உரிமையாளர்கள் சாதாரண பொதுமக்களுக்கு சிறுசிறு நிலங்களாக, மனைகளாக பிரித்து விற்றுவிட்டனர். தற்போது சாதாரண பொதுமக்கள் சீலிங் நிலத்தினை வாங்கி பட்டா பெயர் மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுகெல்லாம். சீலிங்கில் இருந்து விளக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன்.
கோரிக்கை (8):
அதேபோல் நகர்புற உச்சவரம்பில் வரம்பிற்குள் கொண்டு வந்த நிலங்கள் பல இலட்சம் ஏக்கர். ஆனால் அதில் அரசு கைப்பற்றியது சில இலட்சம் ஏக்கர், இந்த கைப்பற்றாமல் இருந்த நிலங்களை அப்பாவி பொதுமக்களுக்கு முந்தைய நில உரிமைதாரர்கள் விற்றுவிட்டார்கள். இப்படி இடியாப்ப சிக்கலில் இருக்கிற நகர்ப்புற உச்சவரம்பு நிலங்களை ஒன்று அரசு முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும். அல்லது வாங்கிய பொதுமக்களுக்கு ஒப்படைத்துவிட வேண்டும். மக்களிடமும் ஒப்படைக்காமல், அரசும் எடுத்துக்கொள்ளாமல் இரண்டுகட்டனாகவே கடந்த 50 ஆண்டுகாலமாக வைத்திருக்கும் நிலையை கைவிட வேண்டும். சீலிங் உடைக்க பல இலட்சம் கொடுத்தால்தான் பைல் நகர்கிறது. அதனை ஆன்லைனில் கட்டி ஆன்லைன் மூலமே ரிலீஸ் ஆர்டர் கொடுக்கலாம் அதற்கு ஊர்தோறும் துணை ஆணையாளர் போட்டு வரிபணத்தில் சம்பளம் போடுவதை நிறுத்தாலம் .வெட்டி வேலை வெட்டி சம்பளம்.
கோரிக்கை (9):
கோவிலுக்கு வரி இல்லாமல் கொடுக்கப்பட்ட இனாம் நிலங்களை 1970-களில் அரசு உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற வகையில் அந்த கோவிலுக்கு சேவைகள் செய்த மக்களுக்கே இரயத்துவாரி பட்டா கொடுக்கப்பட்ட விவரங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படவேண்டும்.
கோரிக்கை (10):
கோவில்கள் SLR ஆவணப்படி இனாம் நிலங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற இனாம் நில விவரங்களை பற்றி எல்லாம் எடுத்து தற்பொழுது கோவில் தங்களுக்கு உரிமையான நிலம் என்று சர்ச்சையை கிளப்பி வருகிறது. இது கோவில் நிலங்களா, இனாம் நிலங்களா என்பதை வெகு விரைவில் முடிவெடுத்து சுவாதீனத்தில் இருக்கின்ற அப்பாவி பொதுமக்களுக்கு நிலங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கை (11):
வினோபா அவர்களின் முயற்சியால் நிலம் இல்லாத மக்களுக்கு கொடுக்கப்பட்ட பூமிதான நிலங்கள் இன்றுவரை பட்டா பூமிதான போர்ட் பெயரிலேயே இருக்கின்றது. பூமிதான போர்ட் தற்பொழுது நிலைநிர்வாக துறையில் இணைந்து விட்ட படியால் போர்ட் இருக்கின்ற நிலங்களை எல்லாம் சுவாதீனத்தில் இருக்கின்ற பொதுமக்களுக்கு பட்டா வழங்கி ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இயங்காத பூமிதான போர்டை கலைக்கும்படி வேண்டுகிறேன்
கோரிக்கை (12):
பஞ்சம நிலம் என்று SLR-ல் எவையெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் கையகப்படுத்தி உண்மையான பஞ்சம நில பயனாளிகளின் வாரிசுகளுக்கு ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன்.
கோரிக்கை (13):
பஞ்சம நிலங்களை கையகப்படுத்தி ஒப்படைக்க முடியாத பட்சத்தில் அதற்கு இணையான பரப்புள்ள, இணையான மதிப்புள்ள வேறு அரசின் உபரி நிலங்களை ஒப்படைக்க வேண்டுகிறேன்.
கோரிக்கை (14):
அரசு அனுபந்த பட்டா, நமுனா பட்டா,ஒப்படை பட்டா, டிகார்டு பட்டா, இலவச பட்ட நலிந்தோர்கான நில ஒப்படைப்பு. இராணுவ வீரர்களுக்கான நில ஒப்படைப்பு இப்படி பல்வேறு வகையான ஒப்படை நிலங்களை கிராம கணக்கில் ஏற்றாமலேயே அரசு இன்னும் இருக்கிறது. இவற்றையெல்லாம் அடுத்து நிலவரி திட்ட scheme வருமே அப்போழுது ஏற்றலாமென்ற நிலுவையில் வைத்துள்ளது. இவற்றையெல்லாம் உடனடியாக கிராமகணக்கில் ஏற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி எப்போழுது நில ஒப்படை கொடுத்தாலும்,அப்போதைக்கு அப்போழுதே கிராமகணக்கில் ஏற்றிவிடுகின்ற முறையை நடைமுறை படுத்த வேண்டும்.
கோரிக்கை (15):
பல ஆண்டுகளாக அரசின் புறம்போக்கு நிலத்தில் சுவாதீனத்தில் இருக்கின்ற நிலமற்ற பொதுமக்களுக்கு அவர்களுக்கே ஒப்படை செய்திட வேண்டும்.
கோரிக்கை(16):
நிலமில்லாமல் நீர்நிலை புறம்போக்கில் சுவாதீனத்தில் இருக்கின்ற பொது மக்களுக்கு அரசின் உபரி நிலங்களில் ஒப்படை பட்டா வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கை(17):
மக்களின் விளிம்பு நிலையில் இருக்கின்ற அருந்ததியர்,இருளர், காட்டுநாயக்கர், வில்லியர் உட்பட பழங்குடி மக்களுக்கு இலவசமாக விவசாய நிலங்களும் வீட்டு மனைகளும் ஒப்படைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
கோரிக்கை (18):
UDR க்கு பிறகு நிலவரிதிட்ட சர்வே செய்து கிட்டதட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன அதனல் முழுமையான தமிழக முழு சர்வே செய்ய வேண்டும்.பல்வேறு நில சிக்கலகளை தீர்த்துகொள்ள உதவியாக இருக்கும்
கோரிக்கை(19):
தற்பொழுது இருக்கும்UDR ஆவணங்களில் பல்வேறு பிழைகள், அளவு பிழைகள், பெயர் பிழைகள், புலப்பட உருவ பிழைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் திருத்துவற்கு உரிய ஆதாரங்களுடன் மனு செய்தாலே பல ஆண்டுகள் தாலுக்கா அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்துகொண்டிருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இவற்றை மட்டுமே சரிசெய்துகொள்ள இந்த வேலைகள் எல்லாம் முடித்து கொள்ள மூன்றுமாத தனிப்பட்ட முகாம் நடத்துமாறு வேண்டுகிறேன்.
கோரிக்கை(20):
கிராம நத்தத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் முழுமையாக நத்தம், நிலவரி திட்ட சர்வே இதுவரை செய்யபடவில்லை. அவற்றையெல்லாம் விரைவாக நத்தம் நிலவரி திட்ட சர்வே செய்யப்படும்படி வேண்டுகிறேன்.
கோரிக்கை(21):
ஏற்கனவே நத்தம் நிலவரி திட்ட சர்வே நடத்த பகுதிகளில் தவறாக அனாதீனம் ஆக்காப்பட்டு தவறாக பெயர்கள் மாற்றப்பட்டு நடக்கின்ற ஆவணங்களயெல்லாம் திருத்துவதற்கு மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றனர். நத்தம் மாவட்டம், நத்தம் நிலவரிதிட்ட ஆவணங்கள், நத்தம் வட்டாட்சியர் ஒவ்வோறு தாலுக்காவிலும் தனியாக, வெளிப்படையாக செயல்படுதல் வேண்டும்.
கோரிக்கை(22):
பட்டாக்களில் நிலத்தின் அளவு குறிப்பிடும்போது ஹெக்டேர் ஏர் என இரண்டு அளவுகளை கொடுக்கிறார்கள்.அதனுடைய இன்னொரு குறு அளவான சென்டியர் அளவையும் குறித்து இன்னும் துல்லியத்தை கொடுக்க வேண்டும் கட்டாயம் இதனை நகர்பறங்கிளில் நடைமுறை படுத்தினால் பல நில தாவாக்கள் குறையும்.
கோரிக்கை(23):
மேற்படி கோரிக்கைகளை கொண்டு சேர்க்க மக்களிடம் விவாதம் ஆக்க விழப்புணரவு கொண்டு வர சமூக ஊடகங்களில் இயங்கும் தகவல்பெறும் உரிமை சட்ட ஆரவலர்கள்,அறப்போர் சட்டபஞ்சாயத்து இயக்கத்தின்னர் பத்து ரூபாய் இயக்கம் நண்பர்கள் இதனை கொண்டு சேர்க்குமாறு வேண்டிகிறேன்.இதற்கு என்று இயக்கம் வேண்டுமானாலும் கொண்டு செல்ல தயாராய் இருக்கறேன்(ஆலோசனைகள் தேவை)
படிக்கின்றவர்கள் இதனை மக்களுக்கு கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறேன்.
Copy paste செய்து பகிர்கிறவர்கள் கட்டாயம் என் பெயரை குறிப்பிட்டால் ஊக்கமாக உணர்வேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /ரியல்எஸ்டேட் ஆலோசகர்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category