பிரதமர், எங்களை தூய்மையாக இருக்கச் சொன்னார், இருக்கிறோம்! கைகழுவச் சொன்னார், கழுவினோம்! தள்ளி நிற்கச் சொன்னார், நிற்கிறோம்! வீட்டிலேயே இருக்கச் சொன்னார், இருக்கிறோம்!கைத்தட்டச் சொன்னார், தட்டினோம்! விளக்கேற்றச் சொன்னார் ஏற்றுகிறோம்! இனி என்ன சொன்னாலும் செய்வோம்! ஏன் என்று கேட்க மாட்டோம்! பகுத்தறிவுக்குட்பட்டதா என்று வீணாக கேட்க மாட்டோம்!
ஏனெனில், அவர் பிரதமர்! எங்கள் பிரதமர்! நாட்டின்மீது அக்கறையுள்ள பிரதமர்!
ஊழல் செய்யாத பிரதமர்!
கொள்ளையடிக்காத பிரதமர்!
தன்னலமில்லாத பிரதமர்!
தனக்கென சொத்து சேர்க்காத பிரதமர்!
நாட்டைக் காட்டிக்கொடுக்காத பிரதமர்!
தீவிரவாதிகளுக்குப் பிடிக்காத பிரதமர்!
விரோதி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பிரதமர்!
ஏழைகள் நலனை சிந்திக்கும் பிரதமர்!
உலகில் இந்தியாவை தலைநிமிரச் செய்த பிரதமர்!
ஊழல்வாதிகளுக்கு பிடிக்காத பிரதமர்!
அவர் என்ன சொன்னாலும், அதில் உண்மை இருக்கும்! நன்மை இருக்கும்! தேசநலன் ஒன்றே ஓங்கி ஒலித்திருக்கும்!
ஆகவே, நாங்கள் பிரதமரின் பின்னால் அணிவகுப்போம்!!
0 comments:
கருத்துரையிடுக