Home » , , » Eat Healthy Food-Vegitables-Heart Problem-Eat oats -சத்தான உணவுகளை சாப்பிடுங்க ato z help

Eat Healthy Food-Vegitables-Heart Problem-Eat oats -சத்தான உணவுகளை சாப்பிடுங்க ato z help

Written By M.L on சனி, 10 மார்ச், 2012 | மார்ச் 10, 2012

சத்தான உணவுகளை சாப்பிடுங்க!

இங்கதான் வச்சேன், ஆனா எங்க வச்சேன்னு தெரியலையே? என எதையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வப்போது செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் கூட மறந்து விடுகிறதா?. 'கஜினி'யாகி விட்டோமே என்று பயப்படத் தேவையில்லை. இந்த ஞாபக மறதிக்கு முக்கியக் காரணம் மூளையின் நினைவுச் செல்கள் சிறிது சிறிதாக செயல் இழந்து வருவதுதான்.
நினைவுத்திறன் குறைபாடு இன்றைக்கு பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் எண் விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர் போன்ற புத்திசாலித்தனமான விளையாட்டினை விளையாடுவதன் மூலம் நினைவுத்திறனை மீட்க முடியும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் உண்ணவேண்டிய ஊட்டச்சத்துணவுகளையும் பரிந்துரைத்துள்ளனர்.பச்சைக் காய்கறிகள்பச்சை இலை காய்கறிகளான ப்ரூகோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் பி6, பி12 மற்றும் போலேட் உள்ளது. இது மூளை நினைவுத்திறனுக்கு ஏற்றது. அல்சீமர் நோயாளிகள் இவற்றை அதிகம் உண்ண பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றில் உள்ள உயர்தர இரும்புச்சத்து மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் தடுக்கிறதாம். தினசரி உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதன் மூலம் நினைவுத் திறன் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.தானியங்கள்
சிவப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் தானியவகைகள் மூளைக்கு ஏற்றது. இவற்றை உண்பதன் மூலம் மூளை நரம்புகளுக்குத் தேவையான ஆக்ஸிசன் கிடைக்கிறது. இது மூளைக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க செய்யும்.முட்டை அவசியம்
முட்டையில் உள்ள புரதம், வைட்டமின் பி காம்ளக்ஸ், போன்றவை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நினைவுத் திறனை அதிகரித்து மூளை நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது. எனவே தினசரி உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.பச்சைத் தேநீர்பச்சைத் தேநீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மூளையின் நியூரான்களை ஆரோக்கியமானதாக்குகிறது. எனவே அல்சீமாரால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் தேநீர் அருந்துவது சிறப்பானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.ப்ளுபெரீஸ் பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் மூளைக்கு மிகவும் ஏற்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ளு பெரீஸ் பழங்கள் நினைவாற்றலை அதிகரித்து கற்கும் திறனை உயர்த்துகிறதாம். மூளை தொடர்பான அழுத்தத்தினை குறைக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ப்ளு பெரீஸ் பழங்களை உண்ண கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஸ்ட்ராபெரீஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளை நரம்புகளை பாதுகாத்து உடலுக்கு தேவையான கட்டளைகளை செலுத்துவதற்கு பாதுகாப்பளிக்கிறது.பாதாம் பருப்பு
மீன்கள், பாதம் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ், வைட்டமின் ஈ போன்றவை மூளையின் நரம்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடங்களின்றி நடைபெற வழிவகுக்கிறது. சுறுசுறுப்பு, விழிப்புணர்வு திறன் அதிகரிக்க இவற்றை தினசரி உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும் என நரம்பியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.டார்க் சாக்லேட்சாக்லேட் பிரியர்கள் சந்தோசமாய் இனி சாக்லேட் சாப்பிடலாம் ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ மூளைக்கு உற்சாகம் தருகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். எனவே டார்க் சாக்லேட் சிறிதளவு சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே இந்த உணவுகளை உட்கொள்வதோடு மூளைக்குத் தேவையான உற்சாகமான பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கலாம் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள்



முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கிறனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.
சர்வ ரோக நிவாரணி
ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தினமும் ஒரு கப் ஓட்ஸ்
தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.
இதயநோய்
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.
இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்
பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கை
11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

S.MANI SUNDHARAN
''விட்டுகொடுப்போர் கெட்டுபோவதில்லை
  கெட்டுபோவோர் விட்டுகொடுப்பதில்லை''

Note : Provide your comments by clicking below options! Thanks ! :)

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category