Home » » நான் வீட்டு முதலாளி பேசுறேன்

நான் வீட்டு முதலாளி பேசுறேன்

Written By M.L on செவ்வாய், 18 ஜூன், 2013 | ஜூன் 18, 2013

இரவு பத்து மணி. அந்த பெரிய பங்களாவின் போன் அலறியது. வீட்டில் வேலைக்காரியும், நோயாளியான அவ்வீட்டுப் பெண்ணையும் தவிர யாருமில்லை. வேலைக்காரி ஓடிவந்து போனை எடுத்தாள்.

“”நான் வீட்டு முதலாளி பேசுறேன். நான் சொல்றதை நீ செஞ்சேனா ஒனக்குப் பத்துலட்சம் தருவேன்”

“”ஐயா, சொல்லுங்க ஐயா…நீங்க சொல்றதைச் செய்யத்தான் ஐயா நானிருக்கேன்.”

“”ரூம்ல என் வொய்ஃப் படுத்திருப்பா. ஒரு டின் கெரசினை அவள் படுக்கையில் ஊற்றி தீ பற்ற வை. நான் வெயிட் பண்றேன்.”

“”ஐயா….”

“”பத்துலட்சம் வேணுமின்னா செய். நான் போன்ல வெயிட் பண்றேன்”

“”அய்யா நீங்க சொன்னபடியே செஞ்சுட்டேன்”

“”வெரி குட். இப்ப நீ வீட்டின் முன்கதவைப் பூட்டிட்டு பின் வாசல் வழியாக வெளியேறு.”

“”ஐயா, நம்ம வீட்டுக்கு ஒரு வாசல்தான இருக்கு?’

“”அடடா… ஸாரி… ராங் நம்பர்”

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category