Home » » போன சனிக்கிழமை என் பையன் ஸ்கூல்ல Parents Meeting..

போன சனிக்கிழமை என் பையன் ஸ்கூல்ல Parents Meeting..

Written By M.L on புதன், 3 ஜூலை, 2013 | ஜூலை 03, 2013

போன சனிக்கிழமை என் பையன் ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meetingமே ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட அருமை ( !), பெருமைகளை (?!) மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

" உங்க பையனை என்னால Conட்ரொல் பண்ணவே முடியல சார்..! "

" ஏன் மேடம்..?! என்ன ஆச்சி "

" 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்...

3. திடீர்னு எந்திரிச்சு " டவுட் மிஸ்னு " Subject-க்கு சம்பந்தமே இல்லாம எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5. அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! "

" உஸ்ஸப்பா.. Same Complaint..! " என்றேன் நான்.

" Same Complaint-ஆ..? என்ன சார் சொல்றீங்க..?! " ஆச்சர்யத்துடன் கேட்டார் அந்த மிஸ்.

" டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல வந்தேன்..! "

" ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும் இதே தான் சொன்னாங்களா..?! "

அதற்கு நான் சொன்னேன்,

" ஹி., ஹி., ஹி... இல்லங்க மேடம்.. நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும் இதே Complaint தான் எங்கப்பாகிட்ட சொல்லுவாங்க..!

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category