Home » » மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்கு கணவர் உரிமை கொண்டாட முடியுமா?

மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்கு கணவர் உரிமை கொண்டாட முடியுமா?

Written By M.L on புதன், 6 ஜனவரி, 2021 | ஜனவரி 06, 2021

 மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்கு கணவர் உரிமை கொண்டாட முடியுமா*?


*ஒரு சொத்து
எந்த வகையில் வந்தது என்பதை பொறுத்து அதன் உரிமை அடங்கி இருக்கிறது. பூர்வீக சொத்தாக இருந்தால் அந்த சொத்தை அனுபவிப்பவருக்கு பின் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் உரிமை உண்டு. அதனால் தான் தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டு என்பது உறுதி படுத்தப்பட்டதாக இருக்கிறது.*
*சொத்தில் பெண்ணுக்கான அதிகாரம்*
*அதே வேளையில் பூர்வீக, பரம்பரை சொத்தாக அல்லாமல் ஒரு ஆண் தன் சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கி இருந்தால் அந்த சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது. அது அவருக்குரிய தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படுகிறது. அதனால் அந்த சொத்துக்கு அவர் மட்டுமே உரிமை உடையவர் ஆகிறார். தன் காலத்துக்கு பிறகு தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது.*
*அதில் வேறு யாரும் தலையிட முடியாது. அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடவும் முடியாது. அதேபோன்ற சாரம்சம்தான் ஒரு பெண் பெயரில் உள்ள சொத்துக்கான உரிமையிலும் அடங்கி இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அந்த பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்தாக பார்க்கப்படுகிறது.
அதாவது ஒரு பெண்ணுக்கு பெற்றோர் மூலமாக சொத்து வந்திருக்கலாம். அல்லது அந்த பெண் சுயமாக சம்பாதித்து அந்த வருமானம் மூலம் தனது பெயரில் சொத்து வாங்கி இருக்கலாம். அல்லது கணவர் தன் வருமானத்தில் தனது மனைவி பெயரில் சொத்து வாங்கி இருக்கலாம்.*
*தனிப்பட்ட சொத்து*
*இப்படி எந்த ரூபத்தில் பெண்ணின் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதற்கு அந்த பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். ஏனெனில் இந்து வாரிசுரிமை சட்டப்பிரிவு ஒன்று ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்தாகும் என்ற சாரம்சத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது.
எனவே கணவன், தன் மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு என்று நினைக்க முடியாது.*
*வீட்டில் உள்ள மற்றவர்களும் அந்த பெண்ணின் சொத்தில் பங்கு கோர முடியாது.
மருகளும், மாமியார் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது.
அந்த பெண் தனது காலத்துக்கு பிறகு யாருக்கு கொடுக்க நினைக்கிறாரோ அவருக்கு கொடுக்கலாம்.
அது அவர் சுயமாக எடுக்கும் முடிவாகவே இருக்கும்

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category