Home » , » நேற்று சென்னையில் நடந்த இந்த நிகழ்வு

நேற்று சென்னையில் நடந்த இந்த நிகழ்வு

Written By M.L on சனி, 8 பிப்ரவரி, 2014 | பிப்ரவரி 08, 2014

நேற்று சென்னையில் நடந்த இந்த நிகழ்வு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை:

Atoz schools children


நேற்று வலைத்தமிழுக்கு சென்னையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை... அனுப்பி பகிரக் கேட்டுக்கொண்டார்கள். நண்பர் வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகிறவர்கள். எனவே காலையில் தனியார் வாகனம் வந்து குழந்தையை பள்ளிக்கு ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். நேற்றும் அதன்படியே நண்பர் அவரின் மாமியாரை வெளியில் நின்று குழந்தையை வாகனத்தில் அனுப்பச் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தார். வழக்கமாக வரும் நேரத்தில் ஐந்து நிமிடம் முன்பே ஒரு வாகனம் வந்தது, ஆனால் அதில் தினமும் வரும் பக்கத்து தெருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் இல்லை. நண்பரின் மாமியார் சந்தேகப்பட்டு பணிப்பெண்ணை எங்கே அந்த இரண்டு குழந்தைகள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சில காரணங்களை சொல்லி மழுப்பியுள்ளார் குழந்தையை அழைக்க வந்த பெண். திருப்தி அடையாத நண்பரின் மாமியார் மருமகனை சத்தம் போட்டு கூப்பிட, நண்பர் வந்து விபரம் கேட்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். எனவே அவர் சுதாரிப்பதற்குள் வாகனம் வேகமாகப் போய்விட்டது. பின்புறம் பார்க்கையில் அந்த வாகனத்திற்கு வாகன எண் (Registration number plate) இல்லாமல் இருந்துள்ளது. இவர்கள் கொஞ்சம் சுதாரிக்காமல் விட்டிருந்தால் வந்த வட இந்திய வாகன ஓட்டுனரும், தமிழ் பேசும் பணிப்பெண்ணும் குழந்தையை கடத்தியிருப்பார்கள். நண்பர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெற்றோர்களே! சென்னை நாளுக்கு நாள் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் மாறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. எதையும் அசட்டையாக இல்லாமல், விழிப்புணர்வுடன், எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category