Home » » What will happen when ice mountain Melts and Not melts!!!

What will happen when ice mountain Melts and Not melts!!!

Written By M.L on வெள்ளி, 7 பிப்ரவரி, 2014 | பிப்ரவரி 07, 2014



how ice mountain melts?

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

உண்மைதான்… பனி உருவத்தில் பெரிதாகி, கடலில் மிதந்து கொண்டிருந்தால் பலரது உயிரையும் காவு வாங்கிவிடும். 1912ல் உற்ச...ாகமான முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பலுக்கு எமனாக நகர்ந்து வந்தது ஒரு பனிக்கட்டிப்பாறைதான். மரங்களாலும், இரும்பினாலும், இன்னபிற வலுவான பொருட்களாலும் உருவாக்கப்பட்ட அந்த மெகா கப்பலை, வெறும் தண்ணீரால் மட்டுமே ஆன பனிப்பாறை ஆட்டம் காணச் செய்தது. 1517 பேரை சாகடித்தது. இந்த அளவு அசாத்திய சக்தி கொண்ட பனிப்பாறைகள் பூமிப்பந்தின் சில இடங்களில் கடலாகவே விரிந்து கிடக்கின்றன.

வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் நிரந்தரமாக ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருக்கிறது. தென்துருவத்தின் அன்டார்க்டிகாவிலும் ஐஸ்… ஐஸ்தான். இந்த ஐஸ் பாறைகளின் பருமன் மட்டுமே 6 ஆயிரத்து 500 அடி. இவை எல்லாம் உருகிவிடுவதாகக் கற்பனை செய்யும்போதே விஞ்ஞானிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. உலகின் கடல் மட்டமே 180 அடி அதிகரித்துவிடும் என்பதுதான் காரணம். பூமி வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்வது நம் கடமை என சுற்றுச்சூழலாளர்கள் வாய் ஓயாமல் கத்துவதற்கும் இதுவே காரணம்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category