Home » , , » மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

Written By M.L on திங்கள், 15 செப்டம்பர், 2014 | செப்டம்பர் 15, 2014

மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் திரும்பப்பெறுவது எப்படி? ..

மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி)
யாரை அணுகுவது: பள்ளித் தலைமை ஆசிரியர்
மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

*என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் : மதிப்பெண்
பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம்
செலுத்திய ரசீது.

*எவ்வளவு கட்டணம்: உயர்நிலைப் பொதுத் தேர்வு (10
ஆம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்
தேர்வு (+2) பட்டியல் ரூ.505.

*கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60
நாள்கள்.

*நடைமுறை: காவல் துறையில் புகார்
அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ்
வாங்கிய பிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின்
மூலம் விண்ணப்பம்
வாங்கி அதை நிரப்பி வட்டாட்சியரிடம் கையொப்பம்
வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத் தோடு ஒரு கடிதம் மற்றும்
இணைப்புகள் சேர்த்து மாவட்ட
கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பவேண் டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன்
அடிப்படையில் அவர் பள்ளித்
தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்
துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற் பட்ட உயர்
கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும். 


Thanks to Sanjana.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category