மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார்.
தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அன்று நீதிமன்றத்தில் மொக்கையின் வழக்கு கேட்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நிறுவனம் ஒரு பிரபல வழக்குரைஞரை நியமித்திருந்தது. குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட மொக்கையை வழக்கறிஞர் கூண்டிலேற்றி விசாரிக்கிறார்.. இதுதான் இன்றைய காட்சி.

வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் "நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.." என்று சொன்னீர்கள் அல்லவா..?
மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்...
வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?
வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?
மொக்கை : நிகழ்வு நாளன்று நானும் என் கழுதை கல்யாணியும்..
வழக்கு : (குறுக்கிட்டு... நீதிபதியை நோக்கி..) கனம் கோர்ட்டார் அவர்களே.. விபத்து நடந்தவுடன் வந்த காவலர்களிடம் இவர் தனக்கு எதுவும் ஆகவில்லையென்று கூறியிருக்கிறார். இப்போது தீயநோக்கத்தோடு வழக்கு தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறார். உடனே இவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.
நீதிபதி : பொறுங்கள்.. எனக்கு அவர் கல்யாணிக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறது. மிஸ்டர்.மொக்கை.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்..
மொக்கை : நன்றி நீதிபதி அவர்களே.. அன்று நானும் என் பாசத்துக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாகனம் எங்களை மோதி தூக்கி எறிந்துவிட்டது. நாங்கள் சாலையில் பக்கத்துக்கொருவராக விழுந்தோம். எனக்கு கையிலும் காலிலும் எலும்பு முறிவு. மூன்று பற்கள் விழுந்துவிட்டன. மூக்கு நசுங்கி ரத்தம் பீறிட்டது. சாலையின் அந்தப்பக்கம் விழுந்து கிடந்த கல்யாணி, பாதி உடல் நைந்துபோய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.
தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"
0 comments:
கருத்துரையிடுக