மரச்சீனி அல்லது மரவள்ளி கிழங்கு என அழைக்கப்படும் இவ்வகை கிழங்குகள் ஒரு முக்கிய உணவு பயிராக காணப்படுகிறது. இவை குமரி மாவட்டம் மட்டுமின்றி இதர மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. மண்ணின் அடியில் விளையும் கிழங்கு வகையிலே அதிக எடை கொண்டதும், அதிக உடல் சக்தியை தரவல்லது. இது காலை உணவாகவும், மதியம் உணவாகவும், அரிசிக்கு மாற்று உணவாகவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இவைகளில் அதிக அளவில் பூச்சி நோய்கள் தாக்குவதில்லை. சுமார் 10 முதல் 12 மாதம் வரை வயதுடைய இப்பயிர் அனைத்து தரப்பு மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. மரச்சீனி பயிரின் இடையில் ஊடு பயிராக உளுந்து போன்ற பயிர் வகைகளை பயிரிடுவதால் உபரி லாபம் பெற வாய்ப்புள்ளது. மேலும் இதில் அதிகம் காணப்படும், மொசேக் வைரஸ் என்ற நோயினை தவிர்க்க அறுவடை சமயம் இந்நோய் தாக்காத பயிர்களை அடையாளம் கண்டு அதிலிருந்து இனப்பெருக்க குச்சுகளை தேர்வு செய்ய வேண்டும்.
பருவகாலம்

ஜுன், ஜூலை மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மரச்சீனியை நடவு செய்யலாம். 270 முதல் 300 நாட்கள் வரையிலும் உயர் விளைச்சல் ரகங்களும் இதர நாட்டு ரகங்கள் 350 நாட்கள் வரையிலும் வயதுடையதாகும்.சிரிசகியா, சிரிவிசாகம், சிரிகாய் போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் நல்ல விளைச்சலை தரும். கிழங்கு ஆராடரி நிலையம், திருவனந்தபுரம் ரகங்கள் குமரி மாவட்டத்திற்கு ஏற்ற ரகங்கள். லெட்டரிட் மண், லோம் மண், செம்மண் கலந்த கரிசல் மண், செம்மண் போன்ற எல்லாவித மண்களிலும் செழித்து வளரும். வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் பகுதியிலும் தண்டு வளரும்.
நிலம் பண்படுத்தல்
4 முதல் 5 முறை நன்கு உழுது மண்ணை மிகவும் மிருதுவாக்கி மண் மென்மையாக காணப்பட வேண்டும். பின்பு இக்கம்புகளை குவில் முறையிலும் அல்லது நேரடி நடவு முறையிலும் விதை கம்புகளை ஊன்ற வேண்டும்.
மொசைக் வைரஸ் தாக்காத செடியில் இருந்து 15 செ.மீ. வரை நீளம் உள்ள கம்புகளை தேர்வு செய்யப்பட வேண்டும். அவைகளில் கண்டிப்பாக 8 கணுக்கள் இருக்க வேண்டும். கம்புகளை துண்டிக்கும் போது கூர்மையான கத்தி கொண்டு வட்ட வடிவில் வெட்ட வேண்டும்.
விதை கம்பு நேர்த்தி
விதை கம்புகளை கார்பன்டாபியம் 1 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து 15 நிமிடம் கம்புகளின் நுனியை ஊற வைக்க வேண்டும். பின்பு, அசோஸ்கபிலாம் பாஸ்போபாக்பியா ஒவ்வொன்றும் 30 கிராம் என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைந்து 20 நிமிடம் குச்சியை அடிப்பாகத்தில் நனைய வைக்க வேண்டும். பின்பு சிங்சல்பேட் மற்றும் பெரஸ் சல்பேட் 0.5 வீதம் கரைசலில் 20 நிமிடம் வைத்து குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
செடிக்கு செடி 74 செ.மீட்டரும், வரிசைக்கு வரிசை 75 செ.மீட்டரும் இடைவெளியில் நடவு செய்யப்பட வேண்டும்.
நீர்பாசனமுறை
நடவு செய்த உடன் நீர்பாசனம் செய்ய வேண்டும். பின்பு 3 மாதம் வரை 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறையும் பின்பு 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்பாசனம் செய்ய வேண்டும். மானாவாரி இம்முறை பொருந்தாது.
எக்டருக்கு 25 டன் தொழு உரம், மற்றும் 45, 90,120 தழை, மணி, சாம்பத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். 90 நாட்கள் கழித்து 45:120 என்ற அளவில் தழை மற்றும் சாம்பல் சத்து உரம் இட வேண்டும்.
1 சதவீத பெரஸ்சல்பேட் மற்றும் 0.5 சதம் சிங்சல்பேட் உரங்களை 60 நாட்கள் மற்றும் 90-வது நாளில் தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலைவண்டு, மற்றும் வெள்ளை ஈ காணப்பட்டால் 5 மில்லிவேம்பம் எண்ணெயை 1 லிட்டர் நீரில் கலந்து 1 மில்லி டிப்பால் இட்டு நன்கு கலந்து அடிக்க வேண்டும். 9 முதல் 11 மாதத்தில் இலையில் 50 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறும். மூட்டு பகுதியில் மண் கிறில் விழும். இதுவே அறுவடைக்கு ஏற்ற தருணம். பாரக்கோல் அல்லது கடப்பாறை கொண்டு கிழங்குக்கு சேதம் விளைவிக்காமல் அறுவடை செய்ய வேண்டும்.
எக்டர் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் கிழங்குகள், நீர்பாசனம் பெறும் சாகுபடியிலும் 20 முதல் 25 டன் மானாவாரி சாகுபடியிலும் கிடைக்கும் என்று வேளாண்மை அறிவியல் ஆலோசகர் டபிள்யு போஸ்லின் வின்ஸ்டன் சாம் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக