Home » » உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம!! More..

உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம!! More..

Written By Somperi on புதன், 24 மே, 2017 | மே 24, 2017

 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*். 
Nice Time pass Article in tamil
"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."
 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*. 
"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."
 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*்.
"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."
 *அரசியல்வாதியின்  கல்லறையில்*,
"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."
 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.* 
"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."
இவ்வளவு  தானா வாழ்க்கை❓
ஆம்   அதிலென்ன  சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான்.
அவனோடு  கூட்டு சேர்ந்து  சர்வாதிகார ஆட்டம்  போட்ட   *முசோலினி*   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின் பிணத்தை  தலைகீழாக தொங்க  விட்டு   ஒரு வாரம்  வரை  அத்தனை பொதுமக்களும்   தங்களது  செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து  தங்கள் மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம்  *எதை*  ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓
நமது  *பதவியா?*
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது  *படிப்பா?*
நமது  *வீடா?*
நம்  முன்னோர்களின் *ஆஸ்தியா?* 
நமது  *அறிவா?*  
நமது  *பிள்ளைகளா?*
எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது?Nice Time pass Article in tamil

*ரத்தம்  சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை காப்பாற்றப் போவதில்லை*.
*பசித்தவனுக்கு  உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு  உடை கொடுத்து,  எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும்  சமூகத்தில் வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்.
*ஒரே முறை வாழப்போகிறோம*் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை  செய்வோம்   நன்மைகளை  ஆயிர மடங்காக.
*பிறரை  வாழ  வைத்து  வாழ்வோம்.*
[5/23, 7:57 AM] Nithin Father: *காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள் !!*
*➡தீரன் செய்திகள் குழுமம்*
*செய்திகள் மட்டும்* 
(உண்மை செய்திகளுக்காக)
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கை 60 வரை இருந்தால் 2 இடைநிலை ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களை நியமிக்கலாம்.
மேலும் தொடக்கப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ளலாம். 2016 ஆக., 1 கணக்கெடுப்பின்படி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக கணக்கிடப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (மே 24) பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.கடந்த காலங்களில் 5 மாணவர்கள் குறைந்தால் கூட உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டனர்.
இந்த ஆண்டு 'ஆன்லைன்' மூலம் கலந்தாய்வு நடப்பதால் ஒரு மாணவர் குறைந்தால் கூட, உபரி ஆசிரியரை பணிநிரவல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால், அப்பணியிடங்கள் அனைத்தும் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில் ஆயிரம் பணியிடங்கள் காலாவதியாவதால், புதிய பணி வாய்ப்பு குறையும். இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,' என்றார்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category