சுவாமி விகோனந்தர் அறிவுரைகள
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
1 தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள் . ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும் திரும்ப திரும்ப எழுந்து அந்த லட்சயத்தை அடைய முயற்சிச் செய்யுங்கள். முயற்சியை மட்டும் விடாதிர்கள்.
2சமூதாய வழ்ச்சிக்கு மதம் காரணமல்ல. சிலர் மதத்தால் மற்றவர்களை வீழ்த்தி சுக வாழ்வு வாழ நினைப்பதே காரணம். சிலமதத்தினர் தங்கள் கடவுள் உயர்ந்தவர் என விளம்பரப் படுத்தி மற்றவர்களைக்கொன்றும் அடிமைப்படுத்தியும் விடுவர். கவனம் தேவை.
3 தீண்டாமையை கொள்கையாகவும் உணவை தெய்வமாக கருதும்வரை ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.
4 பொறாமையை மட்டும் நீக்கி பாருங்கள் , நீங்கள் மதத்தான காரிங்களை செய்து முடிப்பீர்கள்.
5 சுயநலம் இல்லாமல் பிறரை வாழ வைக்கும் நிறைவு உடையவர்களே இந்த உலகிற்கு தேவை.
6 உனக்கு தேவையான எல்லா வலிமையும் உனக்குள்ளே இருக்கிறது.
7 உடலையும்., மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் அணுக விடாதே.
8 உன்னை நீயே பலவீனன் என நினைப்பது பெரும் பாவம்.
9 சுயநலமில்லாமல் எல்லோரும் வாழ உழைக்கிறவன் கடவுள். சுயநலத்துடன் செயல்படுபவன் சாத்தான்.
10 மனதை உயர்ந்த லட்சியங்களால் நிரப்பு. அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.
11 எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய். நீ வலிமையும், ஆளுமை குணமும், புத்திகூர்மையும் உடையவன் என நினைத்து செயல்பட்டால் நீ எதிலும் ஏமாறாமல் வெற்றியோடு திகழ்வாய்.
12 நீ இப்போது இருக்கும் நிலைக்கு நியே பொறுப்பு.
13 சோம்பேறித்தனம் உன்னை இழிநிலைக்கு தள்ளும். சுறுசுறுப்போடு செயல்படு.
14 பகை பொறாமையை வெளிப்படுத்தினால் அது திருப்பி வந்து நம்மை வீழ்த்தும்.
15 பிறர் பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்க்காதே.
15 வெற்றியை சந்திப்பவனின் இதயம் பூ போன்று மென்மையானது. ஆனால் தோல்வியை மட்டுமே சந்திக்கிறவன் இதயம் இரும்பைவிட கடினமானதாக இருக்கும்.
16 உன் உள்ளத்தின் முடிவுபடி செயல்படு. வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி இதயத்திற்கு மட்டுமே உண்டு.
17 நி பட்ட துன்பத்தை விட அதில் பெறும் அனுபவத்திற்கு முக்கியத்துவ்ம் கொடு.
18 உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை துறந்துவிடாதே.
19 எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை அயராது உழைமின்.
20 நாம் பிறப்பெடுத்ததின் நோக்கம் சாதனைகள் செய்யவே. கோழைகளாகி உங்களை இழந்துவிடாதீர்கள்.
21உங்கள தாய்நாடு் ,தாய்மதம், பண்பாடு, ஆச்சாரம்., அனுஷ்டானங்களை இழந்துவிடாதே. இவைகள் நம் உயிர். இவைகளை இழந்துவிட்டால் இந்தியா இருக்காது. நம் முன்னோர்களின் மேன்மைகள், பண்டையமன்னர்கள் இந்த நாட்டுக்குச் செய்த பெரிய பெரிய காரியங்கள் போன்றவற்றைச் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்.
செல்வசிவம் தொகுத்தது. (Thanks Selasivam)
0 comments:
கருத்துரையிடுக