வணக்கம் நண்பர்களே...!
உள்ளாட்சி என்றால் என்ன...?
உள்ளாட்சி தேர்தல் பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் என்ன...?
உள்ளாட்சி தேர்தல் என்பது முழுக்க முழுக்க தங்களாட்சி - அதாவது மக்களாட்சி என்பதை. நமது மக்கள் அனைவரும் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே பார்வை கொண்டுதான் பார்க்கின்றனர்.
ஆனால், இந்த ஜனநாயகத்தின் நாடித் துடிப்பாகவே உள்ளாட்சி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பார்வையில் சொல்வதென்றால், இந்தியாவின் ஆன்மா வதியும் 60 விழுக்காடு கிராமங்களில் வாழும் மக்கள், உள்ளாட்சித் தேர்தலின் மூலம் தங்களுக்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டு, அடிப்படை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான வேர், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அரசின் கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் (Directive Principle of the State Policy)கீழ் 40ஆவது பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, “கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்கி, அவைகள் சுய அரசாகசெயல்படுவதற்கு ஏற்றாற்போல் உரிய அதிகாரங்களையும், சுதந்திரத்தையும் அரசு வழங்க வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளது.
உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள்...!
ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க கூடாது.
1.தகுதி :-
*********
*********
(அ) நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டின் உறுப்பினர் பதவியிடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
(ஆ) வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
(இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரை சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது (பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்) மட்டுமே போட்டியிடலாம்.
2.தகுதியின்மை :-
*****************
*****************
கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு ஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்) ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது.
இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ, 1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.
மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் 4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கபட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு ஆனது

(அ) அபராதம் மட்டுமிருப்பின் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
(ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார்.
மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும்
மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.
மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.
மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.
(அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது.
(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.
(இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது.
ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும்.
ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும்.
(ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது.
(உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும் வைத்திருக்கக் கூடாது. (ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும் விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது.
(ஊ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.

மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பிரமாணப் பத்திரம் (அபிடவிட்) யார் தர
வேண்டும்...?
வேண்டும்...?
பிரமாண பத்திரம் (அபிடவிட்) உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினரை தவிர, மற்ற பதவிகளுக்கு வேட்புமனுவுடன் 'அபிடவிட்' தாக்கல் செய்ய வேண்டும்; இதை 20 ரூபாய் பத்திரத்தில் தயாரிக்க வேண்டும். வேட்பாளர் சுயவிபரம், சொத்து மதிப்பு ஆகியவற்றை பதிவு செய்து, 'அதில் கூறப்பட்ட விபரங்கள் அனைத்தும் உண்மை' என, 'நோட்டரி பப்ளிக்' வழக்கறிஞரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
எங்கு எப்படி வேட்புமனு தாக்கல் செய்வது...?
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்களிடமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட நகராட்சியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களான இணை இயக்குனர்களிடம் அவர்களது அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உதவி இயக்குனர் நிலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத்தாக்கல் செய்யலாம்.சிற்றூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உதவியாளர் நிலையில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பாளர்கள் தங்களுடைய எந்தெந்த விவரங்களை வழங்க வேண்டும்...?
உள்ளாட்சியில் நிலுவை இல்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் வீட்டு வரி குடி நீர் வரி உள்ளிட்ட உள்ளாட்சிக்கு கட்ட வேண்டிய நிலுவை தொகை பாக்கி இல்லை என்று சான்று அவசியம் தேவை மற்ற பாக்கிகள் பற்றி வேட்பாளர்கள் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை
அதே போல முன்மொழிபவர்களுக்கும் நிலுவையின்மை சான்றிதழ் சில தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்கின்றார்கள்
அதே போல முன்மொழிபவர்களுக்கும் நிலுவையின்மை சான்றிதழ் சில தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்கின்றார்கள்
நிலுவையின்மை சான்றிதழ் வேட்பாளர் வசிக்கும் உள்ளாட்சியில் பெற வேண்டும்
கிராம ஊராட்சி எனில் ஊராட்சி செயலாளரிடம்
மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி எனில் அதன் அலுவலகத்தில் ரூ 20 விண்ணப்பகட்டணம் செலுத்தி ரூ 3 கோர்ட்டு ஸ்டாம்ப் ஒட்டி விண்ணப்பம் செய்தால் உடனடியாக நிலுவையின்மை சான்று வழங்குவார்கள்.

வேட்பாளர் அவரின் குடும்பத்தினருக்கு வருமான வரி நிரந்திர கணக்கு எண் இருந்தால் அதன் விபரமும் கடைசியாக வருமான வரி கட்டிய விபரமும் அபிடவிட்டில் குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் இல்லை என்று குறிபிட்டால் போதும் கடைசியாக வருமான வரி கட்டிய போது அதில் காட்டியுள்ள மொத்த வருமான விபரம் சொன்னால் போதும் தேர்தலுக்காக வருமான வரியை கட்டி அந்த ஆதாரம் எல்லாம் கொடுக்க தேவையில்லை.
வேட்பாளர் மீது வழக்குகள் இருந்தால் மட்டும் அதன் விபரம் கவணமாக வழங்க வேண்டும்.
சிவில் வழக்கு தீர்ப்பில் குற்றசாட்டில் இருந்து விடுதலையான வழக்கு விபரம் சொல்ல தேவையில்லை.
இராண்டுகள் அதற்கும் மேல் தண்டனை தர கூடிய வழக்கு வேட்பாளருக்கு எதிராக பதிய பட்டு நிலுவையில் இருந்தாம் தண்டனை வழங்கப்பட்டு மேல் முறையீடு நிலுவையில் இருந்தால் மட்டும் அதன் விபரம் கட்டாயம் வழங்க வேண்டும்.
வேட்பாளர் அவரின் குடும்பத்தினரின் அசையும் அசையா சொத்து விபரம் குறிப்பிட வேண்டும்.
கையிருப்பு ரொகம் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் பற்றிய விபரம் தோராயமாக குறிப்பிடாலம்.
அசையா சொத்து பற்றிய விபரம் சரியாக தெளிவாக குறிப்பிட வேண்டும்
குடும்ப சொத்து தனி சொத்து வீடு நிலம் பிளாட் ஆகியவறின் சர்வே எண் சந்தை மதிப்பு வாங்கிய மதிப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும்.
குடும்ப சொத்து தனி சொத்து வீடு நிலம் பிளாட் ஆகியவறின் சர்வே எண் சந்தை மதிப்பு வாங்கிய மதிப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய விபரம் படித்த படிப்பு வருடம் கல்வி நிறுவனம் ஆகிய விபரம் அளித்தால் போதும் ஆதாரம் இணைக்க தேவையில்லை.
வேட்பாளர் மனு பூர்த்தி செய்யப்பட்டு வேட்புமனுவுடன் இணைக்க வேண்டியவை...!
1. அபிடவிட்
(பிரமாண பத்திரம்).
2. உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி இல்லை என்பதற்க்கான நிலுவையின்மை சான்றிதழ்.
3. வாக்காளர் அடையாளர் அட்டை ஜெராக்ஸ் (வேட்பாளர் மற்றும் முன் மொழிபவர்).
4. ஆதார் அட்டை.
5. வாக்காளர் பட்டியல் (வேட்பாளர் மற்றும் முன் மொழிபவர் பெயர் உள்ள பக்கம்).
6. சாதி சான்றிதழ் (ரிசர்வ் தொகுதிக்கு மட்டும்).
7. பொது விபரம் படிவம்.
8. கட்சி சின்னம் எனில் படிவம் ஏ.பி.சி.,
மற்றும் உங்கள் தேர்தல் அலுவலர் .

நன்றி....!
0 comments:
கருத்துரையிடுக