ஏன் இந்தி வேணாம்றோம்:
எழுத்து வழி தொடர்புக்கு (ex. E Mail, official letters and all other documents) இந்தியாவில் இந்திக்காரர்களே இந்தியை பயன்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அனைத்து பெருநிறுவனங்களும் ஆங்கிலத்தையே அலுவல் மொழியாகக் கொண்டுள்ளன.இன்றைய உலகமயமாக்கல் சூழலில் அதுவே சரியானதாகவும் இருக்கும்.
பிரச்சினை அல்லது தேவை இந்தியை பேசக் கற்றுக் கொள்வது மட்டுமே.
அதற்கு spoken hindi வகுப்புகள் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ ஓரிரண்டு மாதங்களில் கற்றுக் கொள்ள முடியும். வெளிமாநில மக்களோடு ஓரளவிற்கு பேசத் தெரிந்து கொள்ள அதுவே போதுமானது.
ஆனால் பள்ளிக்கல்வியில் கட்டாய பாடமாக்கப் பட்டால் இந்தி இலக்கணம், இலக்கியம், அதன் வரலாறு என அனைத்தும் நம் மாணவர்கள் மீது திணிக்கப்படும். மேலும் அதில் தேர்ச்சி பெற்றால்தான் உயர் கல்விக்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளின் இலக்கிய இலக்கணங்களை கற்கும் நம் குழந்தைகளுக்கு மூன்றாம் மொழி அதுவும் உலக அளவிலான வேலை வாய்ப்புகளில் உதவாத இன்னொரு இந்திய மொழியான இந்தியை கற்றுத் தேர்ச்சி பெறுவது வெற்றுச் சுமையே.
தமிழ்நாட்டில் இருக்கும் இந்தி ஆதரவாளர்கள் spoken hindi படிக்கிறதுக்கும் கட்டாய hindi literature படிக்கிறதுக்குமான வித்தியாசம் தெரியாமலும், இந்தி திணிப்புக்கு பின்னால் இருக்கும் ஆர் எஸ் எஸ் மற்றும் பா ஜ க வின் அரசியல் தெரியாமலும் அல்லது தெரிந்ததாலும் இந்த துரோகத்திற்கு துணை போகிறார்கள்.
ஆக, இந்தி தேவைப்படும் போது எங்க புள்ளிங்கோ அவங்களாவே பேசக் கத்துக்குவாங்கோ.
அதான் finalஆ கேக்குறோம் school syllabusல இன்னா மயித்துக்கு இந்தி?????
0 comments:
கருத்துரையிடுக