'யாரோ சுமைதூக்கும் தொழிலாளி' ன்னுதான நினைச்சீங்க ? இவர் வேற யாருமில்ல...
கோவையின் மிகப்பெரும் பணக்காரர்கள்ல ஒருத்தர், கொரோனா பாதிப்பு நிவாரணமா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தவர், வெள்ளிங்கிரி மலை அடிவாரத்துல மிகப்பெரிய கோசாலை நடத்துபவர், கோவையின் ஒருசில அடையாளங்கள்ல... குறிப்பிடத்தக்க அடையாளமான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸின் உரிமையாளர் திரு. சிவகணேஷ்.
தமிழ் சினிமாப்பட மாஃபியா வில்லன் மாதிரி எங்கயோ ஒரு வெளிநாட்டு தீவு பீச்சுல, கோட்சூட் போட்ட நாப்பது அடியாட்கள் புடைசூழ, கைல ஒரு லேப் டாப்-போட உக்காந்துட்டே பிஸ்னெஸ் பண்ற அளவுக்கு திறமையும், பணமும் வெச்சிருக்குற நபர். ஆனா உணவில்லாம வாடுற ரோட்டோர மக்களுக்கு உணவுப் பொருட்கள அனுப்புற கேப்புல, கிடைச்ச சாப்பாட்ட சாப்பிடுறார். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு, எதார்த்தத்தால் நிரம்பி வழியுற மனிதர்.
நா எப்பவுமே இந்த மாதிரி மனுஷங்களத்தான் எனக்கான உதாரண புருஷனாவும், வழி காட்டியாவும் தேர்ந்தெடுப்பேன். 'எதுவுமே நமக்கு சொந்தமில்ல. யார் யாருக்கு எவ்ளோ குடுக்கனும் ன்றத, கடவுள் நம்ம மூலமா அனுப்பி வெக்குறான். நாம வெறும் கணக்குபுள்ள வேலை மட்டும் பாக்குறோம். அதுக்கான சம்பளத்த வாங்கிக்கறோம். வாழ்க்கை ன்றது அவ்ளோதான்' ன்னு, ஆசைகள்லிருந்து விலகி நிக்குற அந்த உடையும், உடல்மொழியும்... வாழ்க்கையோட பெரும்பாலான பாடங்கள, நமக்கு கத்து குடுத்துடும். !!! 💝👏🤝
0 comments:
கருத்துரையிடுக