Home » » இனி காட்பாடி/காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு அரைமணி நேரத்திலும், திருச்சியிலிருந்து சென்னைக்கு இரண்டே கால் மணிநேரத்திலும் செல்லமுடியும்

இனி காட்பாடி/காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு அரைமணி நேரத்திலும், திருச்சியிலிருந்து சென்னைக்கு இரண்டே கால் மணிநேரத்திலும் செல்லமுடியும்

Written By M.L on வியாழன், 9 ஏப்ரல், 2020 | ஏப்ரல் 09, 2020

கிழக்கே பறக்கும் ரயில்...
indian-fastest-railway-icf-made-in-india

நம் அலுவலக நண்பர்கள் இனி காட்பாடி/காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு அரைமணி நேரத்திலும், திருச்சியிலிருந்து சென்னைக்கு
இரண்டே கால் மணிநேரத்திலும் செல்லமுடியும்......
பேசின் பிரிட்ஜ் வியாசர்பாடி சேத்துப்பட்டு அவுட்டர் காத்திருக்கும் நேரங்களைத் தவிர்க்கவும்
சென்னை பெரம்பூர் ஐசிஎப் என்றாலே தொழிலாளர்கள் வேலைக்கு வந்து டைம் பஞ்ச் செய்துவிட்டு... வீட்டுக்கோ... வேறு தொழிலுக்கோ போய்விடுவார்கள் என்ற பழைய வரலாற்றை உடைத்து எறிந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது...
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேக ரயில்...
18 மாதங்களில் பெரும்பாலும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது டிரெயின் 18....மணிக்கு ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது... மொத்தம் 16 பெட்டிகள்... தனியாக எஞ்சின் கிடையாது...பார்க்க லட்சணமாக மூக்கும் முழியுமாக ஜப்பான் புல்லட் ரயில் மாதிரி மொழுக் மொழுக்கென்று உள்ளது...
நவீன குளிர்சாதன வசதி,
பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு செல்வது தெரியாதபடி இணைப்புகள்,
வெளியே ரயிலில் கடகடா சத்தமோ,
டீ, காபி, வடை, பிரியாணி, சமோசா, வேர்கடலே...கானமோ நம் காதில் கேட்காத வகையில் ஏற்பாடு,
தானியங்கி கதவுகள்,
பிளாட்பாரத்திற்கு இடையில் நம் செல்போன் விழாதபடிக்கு தாமாக நகரும் படிக்கட்டுகள்,
முதல் கடைசிப்பெட்டிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு,
தடையில்லா வைஃபை,
கூடவே தகவல்போக்கும் வசதிகள்,
மாற்றுத் திறனாளிகளுக்கும் வசதியான கழிப்பறைகள்,
செல்போனில் செங்கல்பட்டில் இருந்துகொண்டு தாம்பரம் வந்துட்டேன் என்று சொல்ல முடியாதபடிக்கு ஜிபிஎஸ் அறிவிப்புகள்,
அதில் ரயிலின் வேகம்,
தற்போது கடக்கும் இடம்,
போய் சேருமிடத்தின் (அதாவது ரயில் பயணத்தின் இறுதியில்)
உத்தேச நேரம் ஆகிய தகவல்கள் அறிவித்தபடியே இருக்குமாம்..
விமானத்தில் உள்ளதுபோல் ஒளிவிளக்குகள், வசதியான இருக்கைகள் இப்படி நீண்டுகொண்டே போகிறது...இந்த ரயில் 18ன் பெருமைகள்...
2016ல் திட்டமிடப்பட்டு, பெட்டிகள், இழுவை தொழில்நுட்பம், பெட்டியின் உள்வடிவமைப்பு, வண்டியின் கூடு(பாடி) எல்லாம் மேட் இன் பெரம்பூர்....
பிரேக் வசதிகள், தானியங்கி கதவு, இருக்கைகள், காற்று ஸ்பிரிங்குகள் மற்றும் வெளிநாட்டு சரக்குகள்..
என டிரெயின் 18 திட்டத்தில் பணியாற்றியது அனைத்தும் நம்ம ஐசிஎப் ரத்தங்கள்..... நம்பவே முடியவில்லை...ஆனால் அத்தனையும் சாதித்துக்காட்டியிருக்கிறார்கள்...
ஐசிஎப் தொழிலாளர்களின் சாதனைக்குத் தலைவணங்குகிறேன்....

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category