Home » » கேஸ் டெலிவரி செய்ய நம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது.

கேஸ் டெலிவரி செய்ய நம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது.

Written By M.L on திங்கள், 18 மே, 2020 | மே 18, 2020

கேஸ் சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணயம் செய்து உள்ள கட்டணத்திலேயே உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கும் லோடு மேனுக்கான சுமைதூக்கும் கூலி வண்டி வாடகை ஏற்று இறக்கு கூலி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும்

Indane Gas complaint

எனவே நம்முடைய வீட்டில் கொண்டுவந்து சிலிண்டரை டெலிவரி செய்ய கூடுதலாக கட்டணம் பெற்றால் அது சட்டவிரோதம் அவ்வாறு கூடுதல் கட்டணம் பெறுவதற்கு எந்த ஒரு சமையல் எரிவாயு முகவர்களுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எத்தனை கிலோமீட்டர் தூரம் ஆனாலும் கட்டணம் கிடையாது
பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் (வாட்ஸ் ஆப் எண்9514708122) அவர்கள் வீட்டிற்கு கேஸ் டோர் டெலிவரி செய்த கேஸ் டெலிவரி பாய் கூடுதல் கட்டணம் கேட்டுள்ளார். அதற்கு ரசீது கொடுத்தால் செலுத்த தயார் என்று இவர் சொன்னதற்கு கேஸ் டெலிவரி செய்தவர் அவர் வண்டியில் வைத்திருந்த ஒரு டம்மி ரசீதில் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். உடனடியாக வழக்கறிஞர் சதீஷ்குமார் http://crminterface.hpcl.co.in/CRMInterface/lpgcomplaints.aspx ஆன்லைனில் இது தொடர்பாக கேஸ் நிறுவனத்தில் புகார் கொடுத்து இருந்தார் வழக்கறிஞரிடம் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு சமையல் எரிவாயு முகவர் சார்பில் பலர் சமரசம் பேசியும் கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உறுதியாக தெரிவித்து விட்டார் அதன் பிறகு மீண்டும் இவர் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கொண்டு வந்தவர் எவ்வித கூடுதல் கட்டணம் கேட்காமல் டெலிவரி செய்து விட்டு சென்றுள்ளார்.
வழக்கறிஞர் ஆன்லைனில் கொடுத்த புகாரில் வெற்றி பெற்று இருந்தாலும்
கேஸ் ஏஜன்சி பெற்ற கூடுதல் கட்டணத்தை திரும்ப பெறவும் போலி ரசீது கொடுத்த குற்றத்திற்காகவும் நுகர்வோர் நீதிமன்றத்திலும் குற்ற வழக்கும் தொடர உள்ளார்கள் வழக்கறிஞர் சதீஷ்குமார்

உங்களிடம் கேஸ் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் கட்டணம் கேட்டால் அவர்களிடத்தில் நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் ரசீது மட்டும் கேட்டு பெற்றுக் கொண்டு உடனடியாக உங்களின் கேஸ் நிறுவனத்திற்கு ஆன்லைனில் புகார் கொடுங்கள் கட்டாயம் நியாயம் கிடைக்கும்.


ஆன்லைனில் புகார் கொடுங்கள்


0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category