Home » , » 🅾️✳️கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய சுரைக்காய் சாப்பிடுங்கள்...!⛔️

🅾️✳️கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய சுரைக்காய் சாப்பிடுங்கள்...!⛔️

Written By M.L on சனி, 23 மே, 2020 | மே 23, 2020

கோடைக்காலத்தில் உடல் சூடு குறைய சுரைக்காய் சாப்பிடுங்கள்...!




கோடைக்காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும்.

save heath from sun
சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம். 

🔻பலன்கள்🔻


சுரைக்காய் வைட்டமின் பி, சி சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் உடல் பலமாக இருக்கும்.

சுரைக்காயின் சதைப்பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம்.

சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கும் சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும்.

காமாலை நோய்க்கும் சுரைக்காயைப் பயன்படுத்தலாம்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரைக்காயின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category