Home » » குமரி மாவட்ட வாக்காளர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

குமரி மாவட்ட வாக்காளர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

Written By M.L on செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011 | ஆகஸ்ட் 02, 2011

கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுபது சதவிகிதம் நாடார்களும் இரண்டு சதவிகித வெள்ளாளர்களும் இருக்க, கழிந்த இருபது ஆண்டுகளாக குமரி மாவட்டத்திலிருந்து ஒரு வெள்ளாளனே தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று கொலோச்சி வருகிறான். நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை என்ற கோட்பாட்டில் இயங்கி வரும் திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுரேஷ்ராஜனும் தேர்வு பெற்று வந்தால் அந்த உயர் ஜாதிகாரனின் நாடார் சமுதாயத்தின் மற்றும் கிறிஸ்தவத்துக்கு எதிரான அடிமைதனம் மேலும் ஐந்து ஆண்டுகள் தொடரும்.
     குமரி தந்தை மார்சல் நேசமணி அரும்பாடுபட்டு விடுதலை போரில் அதிகமாக பங்கு எடுத்து கொண்ட விளவன்கோடு மக்களின் தாகம் தீர்க்க பெற்று தந்த  நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீர் கழிந்த ஐந்து ஆண்டுகளாக விளவன்கோடு மக்களுக்கு கிடைக்கவில்லை. சுரேஷ்ராஜன் மந்திரி என்ன செய்தான், மனைவி மக்கள் பெயரில் சொத்து மட்டும் சேர்த்தான். கருணாநிதி முதல்மந்திரியும், துரைமுருகன் பாசனதுறை மந்திரியும் என்ன செய்தார்கள்? நெல்லை எனது எல்லை என்று இருந்து விட்டார்கள்.
    குமரி C.S.I பேராயத்தின் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள சொத்தின் உரிமையை தட்டி எடுக்க அதன் மீது வழக்கு தொடர அரசுக்கு பரிந்துரைக்க மாவட்ட ஆட்சியரை தூண்டிய பின் குமரி C.S.I பேராயத்தின் நண்பன் போல் நடிக்கும் சுரேஷ்ராஜனை கிறிஸ்தவ மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

      தமிழகத்தின் எல்லா பாகங்களிலும் நான்குவழி சாலை வேலை முடிந்து  தரைவழி போக்குவரத்து சீர் செய்யப்பட்டு விட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நூற்றுகணக்கில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு விட்டன. சென்னைக்கு அடுத்தபடியான அதிக மக்கள் செறிவும் மிக அதிகமான வாகன எண்ணிக்கையும் உள்ள குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை குமரிக்குள் நுழையாமல் ஆரல்வாய்மொழியுடன் நின்றுவிட்டது. குமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க சுரேஷ்ராஜன் என்ன செய்தான். எத்தனை மேம்பாலங்கள் கட்டினான்.
       கண்ட கண்டவனுக்கு எல்லாம் குமரியில் நினைவு சின்னம் உண்டு. குமரி தந்தை மார்சல் நேசமணிக்க அரசு நினைவு சின்னம் உண்டா இல்லை ஏன்? சுரேஷ்ராஜன் அரசுக்கு பரிந்துரைக்கவில்லை, மணிமண்டபத்துக்கு போட்ட கல்லையும் அவ்விடத்திலிருந்த கடத்திவிட்டார்கள். குமரி தந்தைக்கு இப்படி ஓர் அவமானம் வேண்டுமா?
குமரிக்கு மற்றும் பல்வேறு திட்டங்கள்
1.    குளச்சல் வர்த்தக துறைமுகம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை
2.    புலியூர்குறுச்சியில் விவசாய கல்லூரி இல்லை
3.    நெல்லைக்கு இரண்டு பல்கலைகழகம் குமரிக்கு நாமம் குமரியில் மார்சல் நேசமணி பெயரில் பல்கலைகழகம் இல்லை.
4.    நல்ல குடிநீர் வசதி இல்லை, பேச்சிபாறை தண்ணீரை கூடங்குளம் கொண்டு சென்றுவிட்டார்கள்
5.    குமரிக்கு விமான நிலையம் இதுவரை வரவில்லை
6.    நாகர்கோவிலில் சட்டகல்லூரி இல்லை
7.    குளச்சலில் மீன்வள கல்லூரி இல்லை
 இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

குமரி மாவட்ட வாக்காளர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
இந்த கடிதத்தை அனைத்து குமரி மாவட்ட நண்பர்களுக்கு அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன்

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category