ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல பாத்துட்டுருந்தான். அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல விழுந்துருச்சு.
அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான், எப்படியாவது கிடைச்சுரனும்னு. அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது. இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான். உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ்(pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது, இவன் அதற்கு"இது இல்ல"னு பதிலளித்தான். உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு "கால்குலேட்டர்(calculator)" மாதிரியான பொருளை கொண்டு வந்து இடுதானா என வினவியது.இப்பவும் மனிதன் "இது இல்ல"னு சொன்னான்.தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது. இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.
நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது. உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும், வெள்ளி ல ஒன்னும், தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும் அவனிடமே கொடுத்து விடும். இப்ப இங்க வருவோம்.
மனிதன் சொன்னானா, லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு. அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு சிரித்தது. மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு? தேவதை சொன்னது" நான் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன், ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர் காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்" எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதனு சொல்லிட்டு மறைந்தது. மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

0 comments:
கருத்துரையிடுக