Home » » Happy Path -சிரிக்க மட்டும்:-

Happy Path -சிரிக்க மட்டும்:-

Written By M.L on வெள்ளி, 24 ஜனவரி, 2014 | ஜனவரி 24, 2014

சிரிக்க மட்டும்:-

1) காதலன்:- உண்மையைச் சொல்லு.. நிஜமாவே நீ என்னைத்தானே காதலிக்கிறே..?

காதலி : ஆமாம் மொக்கை.. நேத்திக்குதான் உன் வகுப்புல இருக்கற பயலுக்கெல்லாம் லவ் லட்டர் கொடுத்தேன் .. ஒரு நாதாரியும் பதில் அனுப்பல..!...

2) டாக்டர் :- "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

பேஷன்ட் :- "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

3) நண்பர் 1 :- 'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''

நண்பர் 2 :- ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''

நண்பர் 3 :- ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''

4) ஆசிரியர் :- ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??

மாணவன் :- ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்

ஆசிரியர் :- ?????

5) மாமா :- எம் பொண்ணு கொஞ்சம் 'குண்டு'

மாப்பிள்ளை :- பொண்ணு பேரு என்ன?

மாமா :- அனு

மாப்பிள்ளை :- அப்போ 'அணுகுண்டு'ன்னு சொல்லுங்க.

மாமா :- ????

6) டீச்சர் :- (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

மாணவன் :- (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

டீச்சர் :-????

7) மனைவி :- ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?

கணவன் :- உன் தங்கச்சியை கட்டுவேன்.

8)ஆசிரியர் :- புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?

மாணவண் :- ஆம்புலன்ஸ் வரும் சார்

ஆசிரியர் :- ???

9) தேர்வு அறை...

ஆசிரியர் :- ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க

மாணவன் :- எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"

ஆசிரியர் :- ????

10) வாத்தியார் :- இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...

சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வா‌த்‌‌தியா‌ர் :- அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் :- அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் :-????

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category