கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்....2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
Home »
Useful Tips
» கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
Written By M.L on வெள்ளி, 31 ஜனவரி, 2014 | ஜனவரி 31, 2014
Popular Posts
-
மரச்சீனி அல்லது மரவள்ளி கிழங்கு என அழைக்கப்படும் இவ்வகை கிழங்குகள் ஒரு முக்கிய உணவு பயிராக காணப்படுகிறது. இவை குமரி மாவட்டம் மட்டுமின்றி...
-
குட்டிக்கதை: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா ...
-
குட்டி கதை...!!! ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ...
-
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூ...
-
I am developing one Windows Forms Application in C# and I require to covert the Word (.docx) file to XML and saved it to SQL Server Database...
-
Life is full of turn .. never give up never return .. ! THE PREGNANT DEER SCENARIO... In a forest, a pregnant deer is about to give birth t...
-
மரியாதை மிக்க மனைவி’. கடினமாக உழைக்கும் ஒருவன் நிறைய சம்பாதித்து பணம் சேர்த்து வந்தான்...அவனுக்கு பணம் சேர்ப்பது கொள்ளை பிரியம்.. ஒரு ...
-
நீர் நிலைகள் குளம் குட்டை ஏரி போன்ற அரசு நிலங்கலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு ஆணை 540 வெளியி...
-
1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்...
-
நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மோடு நிலைத்து விட்டால்........ நினைவின் மொழியும், பிரிவின் வலியும்???
0 comments:
கருத்துரையிடுக