Home » » Do you love India!!

Do you love India!!

Written By M.L on வெள்ளி, 7 பிப்ரவரி, 2014 | பிப்ரவரி 07, 2014

 
நில்லுங்கள்...நீங்கள் இந்தியாவை நேசிக்கிறீர்களா?என்றாவது சுதந்திரப்போராட்டத்தை நினைத்து கண்ணீர் விட்டதுண்டா?இத்தனை ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும் பெரிய முன்னே...ற்றம் இல்லை என்று ஆதங்கப்பட்டது உண்டா?இந்திய நாடு உங்களுக்கு தந்த வாழ்விற்கு பெருமைப்பட்டது உண்டா?

இன்று உங்கள் வீட்டு குழந்தைகளைப்போல் வங்காளத்தில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்தது,அந்த குழந்தைக்கு சுபாஸ் சந்திர போஸ் என்று பெயரிட்டார்கள்.செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்து சீமானைப்போல் வாழ வேண்டிய நேதாஜி தேசமக்கள் படும் இன்னல்களை பார்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்,அவரின் எதிர்ப்பு சாதாரண வெற்று போராட்டங்கள் அல்ல,அவை அவர்களின் ரத்தத்தை குடிக்கக்கூடையவை.ஆங்கில அரசு உண்மையில் அவருக்கு பயந்தது.அவரை வீட்டுக்காவலில் வைத்தது,'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் ஹிட்லரை சந்திக்க நினைத்தார் நேதாஜி.

"கிட்டத் தட்ட 60 ஆங்கிலேய உளவாளிகளின் கண்ணில் மண்ணை தூவி வீட்டுக்காவலில் இருந்து தப்பி கல்கத்தாவிலிருந்து காரில் டெல்லி சென்றார்,அங்கிருந்து காரிலேயே பெஷாவர் சென்றார்,தன் பெயரை ரஹ்மத்கான் என்று மாற்றிக்கொண்டு வாய் பேச முடியாதவர் போல் காபூல் நோக்கி பயணித்தார்.வழியில் ஒரு நதியை கடக்க தன்னிடமிருந்த தோல் பைகளையும், மரக்கிளைகளையும் கொண்டு படகு உருவாக்கினார்.இரவு நேரத்தில் பனி கொட்டும் பள்ளத்தாக்கில் மேற்கூரை இல்லாத லாரியில் பயணம் செய்தார்,நிமிர்ந்தால் மரக்கிளைகள் தலையில் தட்டும்,அதையும் பொருட்படுத்தாது ரத்தத்தை உறைய வைக்கும் பனியில் பயணித்தார்...."

அந்த பயணம் மட்டுமல்ல நேதாஜியின் வாழ்க்கைப் பயணமும் கொடிய போராட்டம் தான்.ஆனால் அந்த கொடிய போராட்டத்தில் எல்லாம் நெடிய வீர வரலாறு கொண்ட தமிழினம் அவருடனே இருந்தது.எந்த நாட்டின் விடுதலைக்காக அவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அந்த தேசம் அவரை போர் குற்றவாளி என ஏற்றது,வந்தால் பிடித்துத் தருகிறோம் என்று வாக்குறுதி தந்தது.அதன் பின் அவர் மரண செய்தியை பரப்பி இந்தியாவை நம்ப வைத்தது.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category