Home » , » அதிக வருமானம் பெற ரெட் லேடி பப்பாளியை பயிரிடலாம்

அதிக வருமானம் பெற ரெட் லேடி பப்பாளியை பயிரிடலாம்

Written By Unknown on புதன், 9 டிசம்பர், 2015 | டிசம்பர் 09, 2015

Agriculture tips for papaya
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.


அதிக வருமானம் பெற ரெட் லேடி பப்பாளியை பயிரிடலாம் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.ரெட் லேடி பப்பாளிபப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது. இது நல்ல கண்பார்வைக்கும் மாலைக்கண் நோயை சரி செய்வதற்கும் உரிய மருத்துவ குணம் வாய்ந்ததாகும். தற்போது பப்பாளி பழத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பப்பாளி பயிரிட்டு மற்ற பயிர்களை விட அதிக வருமானம் ஈட்டலாம். அதிக விளைச்சல் தரும் பல பப்பாளியில் பல ரகங்கள் உள்ளன. அவற்றுள்ள அதிக உற்பத்தி திறன் கொண்ட வீரிய ஒட்டு ரகம் ரெட் லேடி பப்பாளி ஆகும்.சிறப்பு குணங்கள்பெண் மற்றும் இருபால் பூக்களுடைய இச்செடிகள் 60-80 செ.மீ. உயரத்தில் இருந்து காய்க்கும் திறன் கொண்டவை. காய்கள் ஒவ்வொன்றும் 1.5 கிலோ முதல் 2.5 கிலோகிராம் வரை எடை உடையது. காய்கள் ஒவ்வொன்றும் 1.5 கிலோ முதல் 2.5 கிலோகிராம் வரை எடை உடையது. ஒரு பப்பாளி செடியில் இருந்து சராசரியாக 40 முதல் 60 கிலோ வரை காய்கள் கிடைக்கும். காய்க்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக ஒரு வருடம் வரை நல்ல மகசூல் கொடுக்கும் திறன் உடையது.பழங்களின் சதைப்பகுதி தடித்து சிவப்பு கலந்து ஆரஞ்சு வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. இந்த ரக பப்பாளி பழத்தில் சர்க்கரையின் அளவு 13-14 சதவீதம் வரை உள்ளது. அதனால் சுவை மிகுந்தது. பழங்கள் அறுவடை செய்த பின்பும் 15 நாட்கள் வரை நல்ல தரமானதாக இருக்கும். அதனால் காய்கள் தொலைதூர பயணத்திற்கும், ஏற்றுமதிக்கும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயார் செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது.அதிக வருமானம்ரெட் லேடி பப்பாளி பயிர் நடவு செய்வதற்கு ஏற்ற பருவம் ஜனவரி-பிப்ரவரி, ஜூன்-ஜூலை மற்றும் அக்டோபர்-நவம்பர் ஆகும்.45ஙீ45ஙீ45 செ.மீ அளவுள்ள குழிகளை 1.8ஙீ1.8 மீட்டர் இடைவெளியில் தயார் செய்து செடிகள் நடவு செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு சுமார் 3 ஆயிரம் செடிகள் தேவைப்படும்.பப்பாளி பயிர் பூக்கும் பருவத்தை அடைந்த பின் தொடர்ச்சியாக பூத்து, காய்த்து கொண்டு இருப்பதால் நடவு செய்யும் போது அடியுரமாக குழி ஒன்றுக்கு 10 கிலோ கிராம் தொழு உரம் மற்றும் 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களை இட்டு நட வேண்டும். மேலுரமாக யூரியா 110 கிராம் சூப்பர் 315 கிராம் பொட்டாஷ் 85 கிராம் என்ற வீதம் கலந்து இரண்டு மாத இடைவெளியில் நடவு செய்த மூன்று மாதங்களுக்கு பிறகு இட வேண்டும்.நடவு செய்த 4-வது மாதத்தில் இருந்து பூத்து காய்க்க ஆரம்பித்து விடும். பப்பாளி செடிகளை அதிகமாக தாக்கும் வளைக்கொல்லி வைரஸ் நோயை எதிர்த்து வளரும் தன்மை உடையது, இந்த ரக பப்பாளி.ரெட் லேடி பப்பாளி செடிகளை நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப்பண்ணையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து பெற்று கொள்ளலாம். அங்கு பப்பாளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பப்பாளி நடவு செய்து அதிகமாக வருமானம் ஈட்டிட ரெட் லேடி ரக பப்பாளி செடிகள் வாங்கி நடவு செய்து பயன்பெறலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.  -Thanthi News

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category