Home » , , , , » வெண்டை சாகுபடி முறைகள் -Forming Lady Finger in Tamil

வெண்டை சாகுபடி முறைகள் -Forming Lady Finger in Tamil

Written By Unknown on புதன், 9 டிசம்பர், 2015 | டிசம்பர் 09, 2015

காய்கறிகளில் அதிகமாக அன்றாடம் உபயோகிப்பது வெண்டை ஆகும். இவை தென் மாவட்டங்களில் மட்டும் இன்றி வட மாநிலங்களிலும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்டை பொறியல், வெண்டைசூப், மற்றும் வெண்டைக்காய் சாம்பார் போன்ற பல உணவு பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் வெண்டை காய்கறிகள் 65 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு, அன்னிய செலவாணியை ஈட்டுகிறது. இவை வெப்பம் மற்றும் மிதவெப்பம் மண்டல பயிராக திகழ்கிறது. வெண்டை மழை காலத்திலும் பயிர் செய்ய உகந்தது. வெண்டை சாகுபடியை பொறுத்தவரை, சிறிதளவு முதலீட்டில் அதிக லாபம் பெறலாம். அறுவடை காலங்களில் 2 தினங்களுக்கு ஒரு முறை இளம் காய்களை அறுவடை செய்து, வருடம் முழுவதும் தினமும் வருமானம் கிடைக்க வழி வகுக்கிறது. வெண்டையை அதிகமாக பூச்சி மற்றும் நோய்கள் தாக்காத காரணத்தினால் , விவசாயிகள் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர்.வெண்டை ரகங்கள்அர்கா அரேபிக்கா, காமாளி, பூசாமுகமலை பூசா சாவாளி, பத்மினி போன்ற ரகங்கள் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் ஆகும். வெண்டை விதைப்பதற்கு 6 மணி நேரத்திற்கு முன் 0.2 சதவீதம் கார்பன்டாபியம் மருந்தில் உறை வைத்து விதைப்பு செய்தால், பூச்சாண நோய்கள் தாக்காத வண்ணம் இருக்கும். பொதுவாக 30ஙீ30 செமீ என்ற இடைவெளி கோடைக்கால பயிரும், 60ஙீ30 செமீ மழைக்கால பயிரும் இடைவெளியில் நடவு செய்யலாம்.மண்ணின் தன்மைநன்கு உழுது சமப்படுத்தப்பட்ட நிலத்தில், மேட்டு திண்டுகள் வைத்து விதைகள் ஊன்றலாம். சம நிலப் பரப்பில் மண் மிருதுவாக இருப்பின் உயிர் ரகங்களுக்கு 75 செமீ என்ற அளவிலும் அல்லது 60ஙீ45 செமீ என்ற அளவிலும் நடவு செய்யலாம்.ஜனவரி முதல் மார்ச் வரையிலும், ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலும் வெண்டை சாகுபடி செய்ய சிறந்த காலம்.நீர் பாசனம்வெண்டை செடி நன்றாக வளர்ச்சி அடைந்து காய்க்கும் பருவத்தில் 3 முதல் 4 நாட்கள் இடைவெளியிலும், இதர நாட்களில் 6-8 தினங்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும். வெண்டை சாகுபடிக்கு எக்டர் ஒன்றுக்கு 30 டன் தொழு உரம் மற்றும் 350 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம், 25 கிலோ மூரியட் சூப் பொட்டாஷ் மற்றும் 300 கிலோ அம்மோனியம் சல்பேட் உரம் அடியுரமாக இட வேண்டும். தழை சத்து உரத்தை 3 முறையாக பிரித்து இடலாம்.கருப்பு நிறம் கொண்ட பாலித்தீன் தாள்களை கொண்டு நிலப்போர்வை அமைப்பதால், களைகள் முற்றிலுமாக முளைக்காமல் இருக்கும்.பயிர் பாதுகாப்புஇலை வண்டு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் அறிகுறிகள் காணப்பட்டால் வேம்பம் கொட்டை சாறு அல்லது 1 லிட்டர் நீரில் 5 மில்லி வேம்பம் எண்ணெய் கலந்து பயிரில் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.விதைத்ததில் இருந்து 35-40 தினங்களில் பூக்கள் தோன்றும். பின்பு விதைத்ததில் இருந்து 55 முதல் 65 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். நடுத்தர இளம் காய்களை இரண்டு தினங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். கோடைக்கால பயிரில் எக்டர் ஒன்றுக்கு 5 முதல் 7 டன் காய்களும் மழைக்கால பயிரில் எக்டர் ஒன்றுக்கு 8-10 டன் காய்கள் அறுவடை செய்யலாம் என்று வேளாண்மை அறிவியல் ஆலோசகர் டபிள்யு.போஸ்லின் வின்ஸ்டன் சாம் தெரிவித்துள்ளார்.-Thanthi News

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category