Home » , , , , » இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்

Written By Unknown on புதன், 9 டிசம்பர், 2015 | டிசம்பர் 09, 2015

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது இலை மடக்குப்புழு ஆகும். தற்போது மழை பெய்துள்ளதாலும், நெற்பயிர் வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதாலும் இதன் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.அறிகுறிகள்தாய் அந்துப்பூச்சிகள் இடுகின்ற முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாட்டில் மடித்து சேதப்படுத்துகிறது. மடிக்கப்பட்ட இலைகளுக்குள் இந்த புழுக்கள் இருந்துகொண்டு பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளில் சேதம் அதிகரிக்கிறது. தாக்கப்பட்ட இலைகள் வெளிறித் தோன்றுவதுடன் பயிரின் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி விடுகிறது.பயிர் வளர்ச்சிக் காலத்தில் பத்து சதவீத இலைச்சேதம், பூக்கும் தருணத்தில் கண்ணாடி இலைகளில் ஐந்து சதவீத சேதம் என்ற அளவை அடையும்போது பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.மேலாண்மை முறைகள்*பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும். *இலை மடக்குப்புழுவின் அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்படுகிறது. எனவே, முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகளுக்கு கவரப்படுகின்ற தாய் பூச்சிகளை அழிக்கலாம்.*தேவைக்கு ஏற்ப தழைச்சத்து இட வேண்டும். இதன் தாக்குதல் அதிகமாக தோன்றும் இடங்களில் ரசாயன உரங்களை தவிர்த்து இதன் சேதத்தை குறைக்கலாம். தழைச்சத்தின் தேவையை தொழுஉரம் அல்லது பசுந்தாள் உரமாக இடுவதன் மூலம் இப்பூச்சியின் பெருக்கம் தவிர்க்கப்படுகிறது.*இலைமடக்கு புழுவின் முட்டை ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணிகள், புழுப்பருவ ஒட்டுண்ணிகள் இதனை தாக்குகின்றன். மேலும், ஓநாய் சிலந்தி போன்ற சிலந்தி வகை ஊன் விழுங்கிகளும் இப்புழுவைத் தாக்குகிறது. முட்டை ஒட்டுண்ணியான, டிரைகோகிரம்மா கைலோனிஸ் ஒரு ஹெக்டேருக்கு 5 சி.சி என்ற அளவில் நட்ட 37, 44 மற்றும் 51-ம் நாட்களில் விட வேண்டும்.*இதன் தாக்குதல் பொருளாதார சேதநிலையை அடையும்போது ஹெக்டேருக்கு கீழ்க்காணும் பூச்சிக்கொல்லி மருந்து ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.1000 கிராம் குளோர்பைரிபாஸ் 20 ஈசி 1250 மில்லி அல்லது அசாடிராக்டின் 0.03 சதவீதம் 1000 மில்லி (அ) கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதவீதம் எஸ்.பி 1000 கிராம் (அ) டைகுளோர்வாஸ் 76 சதவீதம் 627 மில்லி (அ) பிப்ரோனில் 80 சதவீதம் டபுள்யுஜி 50-6 2.5 கிராம்.மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு இலை மடக்குப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று, வேளாண்மை இணை இயக்குனர் ப.இளங்கோ தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category