Home » , » அதிக மகசூல் தரும் வாழை சாகுபடி

அதிக மகசூல் தரும் வாழை சாகுபடி

Written By M.L on புதன், 13 ஏப்ரல், 2016 | ஏப்ரல் 13, 2016

நீண்ட நெடிய பாரம்பரியத்தை குறிப்பிடும் போது வாழையடி வாழையாக என கூறுவது உண்டு. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாவீரன் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பின் போதே வாழை இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. முக்கனிகளில் ஒன்றான வாழை சாகுபடி பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம்.சாகுபடி குறிப்புகள்வாழையில் பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, செவ்வாழை, மட்டி, நாடு, ரச கதலி, ரோபஸ்டா, நேந்திரன், கிராண்ட்நயன் ஆகியவை விரும்பி உண்ணக்கூடிய ரகங்கள். மொந்தன், நேந்திரன் (ஏத்தன்), நாடு, சக்கை ஆகியவை சமையலுக்கு பயன்படுத்தக்கூடியவை. சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் ஏற்றது. களர், உவர் நிலங்களை தவிர்க்க வேண்டும்.நன்செய் நிலங்களில் பிப்ரவரி- ஏப்ரல் மாதங்களில் பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவல்லி ஆகியவையும், ஏப்ரல்- மே மாதங்களில் நேந்திரன், ரோபஸ்டா ஆகியவையும் பயிரிடலாம். தோட்டக்கால் நிலமாக இருந்தால் ஜனவரி- பிப்ரவரி மற்றும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் பயிரிடலாம்.கன்றுகள் தேர்வும், நடவும்பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள ஈட்டியிலை கன்றுகளைத் தேர்வு செய்து நடவேண்டும். பனாமா வாடல் நோய் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய ரஸ்தாளி, மொந்தன், நாடு, ரச கதலி போன்ற ரகங்களுக்கு, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பண்டசிம் கலந்த கரைசலில் 5 நிமிடம் முக்கி நட வேண்டும்.நான்கு பங்கு களிமண்ணுக்கு ஐந்து பங்கு நீர் சேர்த்து தயாரித்த சேற்றுக்குழம்பில் கிழங்கை தோய்த்தெடுத்து, அதன் மேல் கன்றுக்கு 40 கிராம் கார்போபியூரான் தூவி நட வேண்டும்.

 வாழை நடவு செய்த 45-ம் நாள் சணப்பை ஊடுபயிராக விதைத்து, ஒரு மாதத்தில் மடக்கி உழுவது நூற்புழு தாக்குதலைக் குறைக்கும்.தோட்டக்கால் நிலமாக இருந்தால் ரோபஸ்டா, நேந்திரன் ரகங்களுக்கு 6 அடிக்கு 6 அடி இடைவெளி விட வேண்டும். நன்செய் நிலமாக இருந்தால் பூவன், மொந்தன், ரஸ்தாளி, நெய்ப்பூவன் ரகங்களுக்கு 7 அடிக்கு 7 அடி இடைவெளி விட வேண்டும்.நீர்ப்பாசனம்வாழை அடர் நடவு:- குழிக்கு மூன்று கன்றுகள் வீதம், குழிக்கு குழி 6 அடி இடைவெளியிலும், வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.நீர்ப்பாசனம்:- நட்டதும் ஒரு முறையும், நான்காம் நாள் உயிர்த் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். தோட்டக்கால் நிலங்களில் வாரம் ஒரு முறையும் நன்செய் நிலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.சொட்டு நீர்ப்பாசனம்:- வாழைக்கு சொட்டுநீர்ப்பாசனம் அமைப்பது மிகவும் சிறந்தது. அதன்மூலம் உரங்களையும் உரப்பாசனம் மூலம் வழங்கலாம்.ஒருங்கிணைந்த உர நிர்வாகம்வாழை முதல் மேலுரம்:- வாழைக்கு நடவு செய்த மூன்றாம் மாதம் முதல் மேலுரம் இட வேண்டும்.

 நேந்திரன் (ஏத்தன்), ரஸ்தாளி (கோழிக்கூடு) ரகங்களுக்கு கன்று ஒன்றுக்கு 70 கிராம் தழைச்சத்து தரவல்ல 150 கிராம் யூரியாவையும், 50 கிராம் மணிச்சத்து தரவல்ல 310 கிராம் சூப்பர் பாஸ்பேட்டையும், 130 கிராம் சாம்பல்சத்து தரவல்ல 215 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை முதல் மேலுரமாக இட வைப்பு முறையில் இட வேண்டும்.பூவன், ரோபஸ்டா ரகங்களுக்கு கன்று ஒன்றுக்கு 55 கிராம் தழைச்சத்து தரவல்ல 120 கிராம் யூரியாவையும், 50 கிராம் மணிச்சத்து தரவல்ல 310 கிராம் சூப்பர் பாஸ்பேட்டையும், 130 கிராம் சாம்பல்சத்து தரவல்ல 215 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களையும் முதல் மேலுரமாக இட வைப்பு முறையில் இடவேண்டும்.உயிர் உரம் இடுதல்:- நடவு செய்த ஐந்தாம் மாதம் ரசாயன உரம் இடும் முன் தனியாக கன்று ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.வாழை சாகுபடியில் மேற்காணும் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உயர்மகசூலும், உன்னத இலாபமும் பெற தோட்டக்கலை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category