Home » , , » அதிக லாபம் தரும் தேக்கு மர சாகுபடி -UseFul tips for Agri

அதிக லாபம் தரும் தேக்கு மர சாகுபடி -UseFul tips for Agri

Written By Unknown on புதன், 1 ஜூன், 2016 | ஜூன் 01, 2016

அதிக லாபம் தரும் தேக்கு மர சாகுபடி 

மரங்களின் அரசன் என அழைக்கப்படும் தேக்கு மர சாகுபடி அதிக லாபம் தரக்கூடியது. கால தாமதமாக பலன் தந்தாலும், அதிக வருமானம் பெற்றுதரும். தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட மேஜை, நாற்காலிகள் நீண்டநாள் உழைப்பதும், மிகவும் உறுதியானதாக உள்ளதால், பெரிய கட்டிடங்களுக்கு தேவையான ஜன்னல், கதவுகள் இம்மரத்தினாலே உருவாக்கப்படுகிறது. மரம் ஒன்று 10 முதல் 15 மீட்டர் கனஅடி தரக்கூடியது.சுமார் 14 வருடம் கழித்து இதனை உபயோகப்படுத்தலாம். சுமார் 15 முதல் 45 இஞ்ச் மரம் பருமனாக நன்கு பேணப்படும். மரங்களில் இருந்து உருவாகும் இப்பருமன் மிகவும் உறுதி வாய்ந்ததாக காணப்படும்.இடைவெளிமரத்திற்கு மரம் 9 அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளியும் விட்டு ஆரோக்கியமான கன்றுகளை நடவு செய்யலாம்.இவற்றில் மலபார் தேக்கு, அமெரிக்கன் தேக்கு, ஆப்பிரிக்கன் தேக்கு, கோதாவரி தேக்கு போன்ற ரகங்கள் சிறந்த வகை தேக்கு ரகங்கள் ஆகும்.காலநிலை: ஈரம் கலந்த மிதவெப்பம், தேக்குசாகுபடிக்குமிகவும் உகந்தது ஆகும். சூரியவெளிச்சம் அதிகம் கிடைக்கும் இடங்களிலும் தேக்குசெழித்து வளரும். கூடுதலாக 44 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்சம் 13 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையும் தேக்கு சாகுபடிக்கு உகந்தது.மண்ணின் தன்மைசெம்மண் கலந்த கரிசல்மண் தேக்கு சாகுபடிக்கு உகந்தது. காரஅமிலநிலை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். வனப்பகுதியில் 5 முதல் 8 வரை இருக்கலாம். கால்சியம் சத்துநிறைந்தமண் இந்த மர சாகுபடிக்கு உகந்தது. தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் இயற்கையான தழை உரங்கள் தேக்கு மரம் செழித்து வளர செய்யும்.நாற்றங்கால் தயாரித்தல்: நன்கு உழுது பின்பு 50 செ.மீ. உயரத்தில் மேட்டுபாத்திகள் உருவாக்கப்படவேண்டும் 

விதைகளை 5 முதல் 10 செ.மீ. இடைவெளியில் ஊன்றபடவேண்டும்.இடைவெளி மற்றும் நடவு: 45 செ.மீ. அகலம், 45 செ.மீ. நீளம், 45 செ.மீ. ஆழம் என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் முளைவிட்டு வளர்ந்த செடிகளை செடிக்கு செடி 2.5 மீட்டர் இடைவெளியிலும் வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்யவேண்டும்.உரம் இடுமுறைஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் செடி ஒன்றுக்கு 15¢:15¢:15 என்ற விகிதத்தில் 100 கிராம் என்ற அளவில் கலப்பு உரம் இட வேண்டும். இவ்வாறு 3 வருடத்திற்கு உரம் இட 

வேண்டும்.பக்ககிளைகளைகவாத்துசெய்தல்:தேக்குமரத்தின் பருமனைபொறுத்து அதன் மதிப்பு கணக்கிடப்படும். எனவே 5 முதல் 10 வருடங்கள் கழித்துமரம் 25 அடிஉயரம் எட்டியஉடன் பக்ககிளைகளை அகற்றி விடவேண்டும். பக்ககிளைகளை அகற்றாத பட்சத்தில் மரத்தின் பருமன் வளர்ச்சி பாதிக்கப்படும்.அறுவடைநன்கு பேணி வளர்க்கப்பட்ட மரம் 14 வருடத்தில் சுமார் 10 முதல் 15 கனஅடிமரம் மகசூல் பெற்றுதரும். அவை 25 அடிமுதல் 30 அடிஉயரமாகவும் 35 முதல் 45 இஞ்ச் பருமன் உடையதாகவும் இருக்¢கும்.இந்த தகவலை வேளாண்மை அறிவியல் ஆலோசகர் டபிள்யு. போஸ்லின் வின்ஸ்டன் சாம் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category