சாலை விபத்துகளை தடுக்க வேண்டும்.
சாலை விதிகளை மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.
அதனால் எனது பதிவு.
1) சாலை விதிகளில் உள்ள குறைந்த அபராதம் கொண்ட குற்ற செயல்கள் 15 முறைக்கு மேல் தவறு செய்தால் அவர்களின் ஒட்டு உரிமம் ரத்து செய்ய சட்டத்தில் வழி வேண்டும்.
(2)அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் என்ற குற்ற செயலை இரண்டு முறைக்கு மேல் செய்தால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய சட்டத்தில் இடம் வேண்டும்.
(3)மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல் என்ற குற்ற செயலை இரண்டு முறைக்கு மேல் செய்தால் அவர்களின் ஓட்டும் உரிமம் ரத்து செய்ய சட்டத்தில் வழி வேண்டும்.
(4) வாகனத்தில் அதிக பாரம் சுமந்து செல்லுதல் என்ற குற்ற செயல் மூன்று முறைக்கு மேல் செய்தால் அந்த வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய சட்டத்தில் இடம் வேண்டும்.
(5) ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
(6) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ஐந்தாயிரம் அபராதம் தொகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
(7)குற்றம் செய்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் வாகனம் உரிமத்தை பெற விரும்பினால் பத்தாயிரம் தொகை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதை வழிமுறை செய்தாலே அபராத தொகை பல மடங்கு உயர்த்தாமல் எளிமையான முறையில் சாலை விதிகளின் விழிப்புணர்வு மக்களுக்கும்.
சாலை விபத்து இல்லாத இன்ப பயணம் மக்களுக்கு ஏற்படும்.
சாலை விபத்து இல்லாத இன்ப பயணம் மக்களுக்கு ஏற்படும்.
இது எனது தனிப்பட்ட கருத்து (Thanks Murali Jith)
0 comments:
கருத்துரையிடுக