மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா பரவலை தடுக்க, மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு குழுவுக்கு முழு பொறுப்பு உள்ளது.
* ஊழியர்கள் பணிக்கு வரும் போது, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை உள்ளதா என, சோதித்த பின்னரே, பணியை துவங்க அனுமதிக்க வேண்டும்.
* கொரோனா பாதிப்பு அல்லாத நோயாளிகளிடம், அசாதாரணமான காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை குறித்து, தொற்று நோய் தடுப்பு குழு கண்காணிக்க வேண்டும்.
* கொரோனா நோய் தடுப்பு தனிமை மண்டலங்களைச் சேர்ந்த அல்லது அவற்றுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகள், அனைத்து நோயாளிகளையும், கொரோனா அறிகுறி உள்ளவர்களாக பாவித்து, பாதிப்பு இல்லை என முடிவுக்கு வரும் வரை, அக்கறையுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.
* தனிமை மண்டலங்கள் சாராத பகுதியில் உள்ள மருத்துவமனையில், ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், உடனே அது குறித்து, உள்ளுர் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அந்த நோயாளியை, கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன், உடனடியாக வேறு அறைக்கு மாற்ற வேண்டும்.
* அந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஆரோக்கிய பராமரிப்பு ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்பட்டால் அல்லது உறுதியானால், அவரை தனிமைப்படுத்தி, அவருடன் தொடர்பில் இருந்தோரின் விபரங்களை சேகரிக்க வேண்டும்.
* அந்த நோயாளிக்காக, மருத்துவமனையை முழுவதுமாக மூடத் தேவையில்லை.
* எனினும், அடுத்து வரும் நாட்களில், புதிய நோயாளிகள் அதிகரிக்கும்பட்சத்தில், அந்த பிரிவை தற்காலிகமாக மூடலாம். இதைஅடுத்து, அப்பிரிவை சுத்தப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து, மீண்டும் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.
0 comments:
கருத்துரையிடுக