Home » , » சுகாதாரக் கேடான உணவுப் பொருட்களில் எந்தவகையான குறையைக் காண்டாலும் தயங்காமல் புகாரளிக்கவும்

சுகாதாரக் கேடான உணவுப் பொருட்களில் எந்தவகையான குறையைக் காண்டாலும் தயங்காமல் புகாரளிக்கவும்

Written By M.L on புதன், 8 ஏப்ரல், 2020 | ஏப்ரல் 08, 2020

food-coorporation-complaint-contact-number

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கடையில் ஒரு ஜாம் பன் வாங்கினேன். 

சாப்பிட்ட போது கெட்டுப்போனது போல் இருந்தது. பன் பேக் செய்யப்பட கவரில் பார்த்தபோது அதில் தயாரிப்பு தேதி அச்சிடப்படவில்லை. ஆனால் Best before 3 days என்று அச்சிட்டிருந்தது. கடைக்காரரிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. பன் தயாரிப்பாளரிடம் கூறுவதாகக் கூறினார். அதைத் தயாரிக்கும் பேக்கரி வேறு என்பதும் கடைக்காரர் வாங்கி விற்கிறார் என்பதும் தெரியவந்தது. கவரில் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரியம் FSSAI (Food Safety and Standards Authority of India) எண்ணும் இருந்தது.

சில நாட்களுக்கு முன் சென்னையிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறையினர் ஆய்வு நடத்தி சீல் வைத்த செய்தியில் உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறையினரின் வாட்சப் எண்ணும், பொதுமக்கள் அந்த எண்ணில் புகாரளிக்கலாம் என்ற விவரமும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தி ஞாபகம் வந்தது. அந்த எண்ணை எனது போனில் சேமித்து வைத்திருந்தேன்.

அந்த பன் கவரைப் புகைப்படம் எடுத்து, MFG date குறிப்பிடப்படவில்லை என்ற தகவலையும் குறிப்பிட்டு அந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்பி வைத்தேன்.

புகார் எண் குறிப்பிட்டு மறுமுனையிலிருந்து பதில் வந்தது.

பின் ஒரு வாரம் கழித்து ஆங்கிலத்தில் விரிவான பதில் வந்தது. அதன் சுருக்கம் இது:

"புகாரளிக்கப்பட்ட பேக்கரியில் சோதனை நடத்தப்பட்டது. அந்நிறுவனத்தில் சமோசா, பன் மற்றும் பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. முறையான உரிமம் உள்ளது. Exhaust fan ஓட்டை சரியாக மூடப்படவில்லை, ஈக்கள் பறக்கிறது, மாவு மூடிவைக்கப்படவில்லை, குப்பைத் தொட்டிகளுக்கு மூடி இல்லை, பணியாளர்கள் head cover அணியவில்லை, அவர்களது முடியும் நகமும் சரியாக வெட்டப்படவில்லை, அவர்களுக்கு Medical fitness certificate இல்லை. மொத்த இடமும் அசுத்தமாக உள்ளது. தயாரிப்புத்தேதி குறிப்பிடப்படாததற்கு உரிமையாளர் மன்னிப்பு கோரினார், இத்தவறுகள் இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தார். அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Section 55ன் கீழ் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது."

மறுநாள் அதே கடையில் போய் அதே நிறுவனத்தின் பன்னை எடுத்துப் பார்த்தேன். தயாரிப்புத்தேதி முறையாக அச்சிடப்பட்டிருந்தது. அடிக்கடி அந்தக் கடைக்கு செல்கிறேன். அந்த நிறுவனத்தின் அனைத்து பண்டங்களிலும் முறையாக தயாரிப்புத்தேதி அச்சிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு மிகப்பெரும் நன்றி. ஒரே புகைப்படம், ஒரே வாட்சப் மெசேஜ் ஏற்படுத்திய மாற்றம் இது. அனைவரின் போனிலும் கட்டாயம் இருக்க வேண்டிய எண் இது: 94440 42322 நண்பர்கள் ஏதேனும் உணவகத்திலோ பேக்கரியிலோ டீக்கடையிலோ சுகாதாரக் கேடான அல்லது அசுத்தமான அறைகளையோ உணவுப் பொருட்களையோ கண்டால் உடனடியாக புகாரளிக்கவும். காலாவதியான உணவுப் பொருட்களை விற்பது தண்டனைக்குறிய குற்றம். பணம் கொடுத்து நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் எந்தவகையான குறையைக் காண்டாலும் தயங்காமல் புகாரளிக்கவும். 


நன்றி.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category